Published : 17 Sep 2014 07:01 PM
Last Updated : 17 Sep 2014 07:01 PM
வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் தல்வார் ஹுசைன் சையீத்தின் மரண தண்டனையை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் வெடித்ததால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
74 வயது தல்வார் ஹுசைன் சையீத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 3 நீதிபதிகள், தல்வார் தனது இறுதி காலம் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று கூறினர். அதேவேளையில், அவரது மரண தண்டனையை உறுதி செய்வதாக 2 நீதிபதிகள் அறிவித்தனர்.
இதையடுத்து, பெருவாரியான நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் தல்வாரின் மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தல்வாருக்கு தண்டனை குறைக்கப்பட்டதை எதிர்த்து டாக்கா பல்கலைக்கழகம் அருகே பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.
1971 போர்க் குற்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான தல்வாருக்கு போர் குற்ற தீர்ப்பாயம் கடந்த ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அப்போது இதனை எதிர்த்து வங்கதேசத்தில் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது சுமார் 100 கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT