Published : 28 Apr 2019 07:58 PM
Last Updated : 28 Apr 2019 07:58 PM
சீனாவுடன் ஹாங்காங்கை சேர்த்துக்கொள்ளும் சீன அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடத்தினர். இதில் பெரும்பான்மையானோர் மாணவர்கள் ஆவர்.
ஜனநாயகத் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டதற்கு இப்போராட்டத்தின்போது அவர்களின் எதிர்ப்பு கோபமாக வெடித்தது.
ஹாங்காங்கை சீனா சுவீகரித்துக்கொள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டங்களை ஏற்கெனவே இந்நகரம் சந்தித்துள்ளது. எனினும் சமீப ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டங்களில் இது மாபெரும் போராட்டம் என்று கூறப்படுகிறது.
ஹாங்காங் மக்களின் எண்ணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஈடுபட்டுவரும் சீன அரசின் ''ஹாங்காங்க மக்கள் சீனாவிடம் சரணடைதல் சட்டத்தை'' எதிர்த்து இதே போன்ற எழுச்சியை 2014 ஜனவரியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வழிநடத்திய காரணத்திற்காக ஜனநாயக இயக்கத்தின் நான்கு முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்றைய போராட்டத்தின்போது ஹாங்காங்கைச் சேர்ந்த சீனாவுக்கு ஆதரவளித்து வரும் ஹாங்காங் நகரத் தலைவர் கேரீ லேம்மை பதவியிறங்கச் சொல்லி வீதிகளில் முழக்கமிட்டுச் சென்றனர்.
மேலும் இன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட பலரும், '2014 அம்ப்ரெல்லா மூவ்மெண்ட்' போராட்டத்தை அடையாளப்படுத்தும்விதமாக மஞ்சள் குடைகளை வைத்திருந்தனர்.
ஜனநாயக இயக்க பொருளாளர் பேன்லி லீங், ஏஎப்பியிடம் பேசினார். அவர் இன்றைய போராட்டம் குறித்து தெரிவிக்கையில்,
''எங்கள் தலைவர்கள் இந்த வாரத் தொடக்கத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்கள் இதயமே உடைந்துவிட்டது. 2014ல் ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியதற்காக கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவருமே கல்லூரி பேராசிரியர்கள். அவர்கள் சமுதாயத்திற்காக சிறந்த பங்களிப்புகளை அளித்துள்ள பரந்துவிரிந்த அனுபவமும் அறிவும் கொண்ட அறிஞர்கள்.
பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு மட்டுமே வாழ்ந்திருந்தால் அவர்கள் இன்னும் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கமுடியும். இப்படிப்பட்ட போராட்ட வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டியதில்லை. இவ்வளவு நல்ல மனிதர்களை சிறையில் அடைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இவ்வாறு ஜனநாயக இயக்கத்தைச் சேர்ந்த பேன்லி லீங் தெரிவித்தார்.
ஸோயே யோயென் (20) என்ற இளம்பெண் ஒரு பல்கலைக்கழக மாணவி, 2014 அம்ப்ரெல்லா மூவ்மெண்ட் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணின் மகள். அவரும் தனது தாயுடன் இப்போராட்டத்தில் கலந்துகொண்டார்.
இன்றைய போராட்டத்தில் தான் கலந்துகொண்டது குறித்து அவர் கூறுகையில், ''நமக்கு என்னவேண்டுமோ அது பெறமுடியாமல் கூட போகலாம். ஆனால் குறைந்தபட்சம் எதிர்ப்பையாவது காட்ட வேண்டும் என்பதையாவது அடுத்தத் தலைமுறைக்கு நாம் சொல்லியாக வேண்டும்'' என்றார்.
இப்போராட்டத்தில் 22 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. இது 2014 போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விட அதிகம் என்றனர்.
எனினும் போராட்டக்குழுவினர் போராட்டக்காரர்களின் உயர்ந்த எண்ணிக்கையைத் தெரிவிக்கவில்லை.
பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு நாடு இரண்டு அமைப்புகள் என்ற விதியின்படி ஹாங்காங் நாட்டிற்கென்று ஒரு தனி சட்ட அமைப்பைக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT