Published : 24 Apr 2019 03:22 PM
Last Updated : 24 Apr 2019 03:22 PM
கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்களில் 359 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளார்.
தற்கொலைப் படையின் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் நடந்ததன் வாரத் தொடக்கத்திலேயே இந்தியாவும் அமெரிக்காவும் எச்சரிக்கைத் தகவல்களை வழங்கியதாக இலங்கை அமைச்சர் கூறியிருந்தார். தூதரக அதிகாரிகள் உள்ளூர் இஸ்லாமியக் குழுவில் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசுக்கு எச்சரிக்கைத் தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு அமெரிக்கத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்கத் தூதர் அலைனா பெப்லிட்ஸ் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசுகையில், "மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. இலங்கை அரசுக்குக் கிடைத்ததாகச் சொல்லப்படும் மற்ற ஆதாரங்கள் என்ன என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் எங்களுக்கு இச்சம்பவம் குறித்து முன்கூட்டியே தெரியாது என்பதை மட்டும் உங்களுக்குச் சொல்ல முடியும்.
அவ்வகையில் நாங்கள் எந்தவித முன்னெச்சரிக்கையையும் இலங்கை அரசுக்கு அளிக்கவில்லை. அரசாங்கத்தின் உளவு சேகரிப்பு மற்றும் தகவல் பகிர்வில் தவறு நேர்ந்துள்ளது என்பதை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுவிட்டது'' என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
உயரதிகாரிகளைக் கொண்டு இலங்கை அரசு, 'தாக்குதல்கள் நடக்கப்போவதாக வந்த முன்னெச்சரிக்கை தகவல்கள் குறித்து ஏன் உயர் அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற கோணத்தில் ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT