Last Updated : 21 Sep, 2014 11:21 AM

 

Published : 21 Sep 2014 11:21 AM
Last Updated : 21 Sep 2014 11:21 AM

தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்: வாடிகனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இத்தாலி நாட்டின் வாடிகன் நகரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டு உளவுத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தாலியின் தலைநகரான ரோம் நகரத்தில் உள்ளது வாடிகன் நகரம். இங்குதான் போப் ஆண்டவரும் வசிக்கிறார். அவர் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களைச் சந்தித்து உரையாடுவார்.

இந்நிலையில், அந்தத் தினத் தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. அந்நாட்டு உளவுத்துறை, மக்களின் தொலை பேசி உரையாடல்களைக் கண் காணித்து வந்தது. அப்போது சமீபத்தில் ஒரு தொலைபேசி உரையாடலில் அரபு மொழி யில் இருவர் பேசியது பதிவாகியிருந்தது.

அதில், 'வாடிகனில் புதன்கிழமை ஒரு ஜனநாயக நடவடிக்கை' என்று கூறப்பட்டிருந்தது. இந்த இருவரில் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்பே இத்தாலிக்குள் ஊடுருவி விட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அப்ப குதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

'இஸ்லாமிக் ஸ்டேட்' தீவிரவாதி களுக்கு எதிராக போப் ஆண்டவர் விமர்சித்ததும், இராக்கில் அமெரிக் காவின் வான்வழித் தாக்குதல் களுக்கு அவர் ஆதரவளித்ததுமே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x