Last Updated : 07 Mar, 2019 02:08 PM

 

Published : 07 Mar 2019 02:08 PM
Last Updated : 07 Mar 2019 02:08 PM

கிரீஸ் தீவு அருகே படகில் சென்ற சிரிய அகதிகளின் இரு குழந்தைகள் கடலில் விழுந்து பலி

கிரீஸிற்கு சொந்தமான சோமாஸ் தீவு அருகே சென்றுகொண்டிருந்த படகில் சென்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்த சிரிய அகதிகளின் 2 குழந்தைகள் உள்ளிட்ட மூவர் தவறி விழுந்து கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து கிரீஸ் கடலோர காவற்படை தெரிவித்தாவது:

இச்சம்பவத்தின்போது, மேலும் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 12 பேர் படகில் இருந்ததாக நம்பப்படுகிறது. படகிலிருந்து தவறிவிழுந்து கடலில் மூழ்கிய இரு ஆண் குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர், பின்னர் படகிலிருந்து விழுந்து மூழ்கிய ஒரு நபரும் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

2019 தொடங்கி இரு மாதங்களில் மட்டும் மத்தியதரைக் கடலைக் கடக்க முற்படும்போது 200க்கும் அதிகமாக அகதிகளும் மற்றும் புலம்பெயர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமானவர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பில் 2015ல் அடைக்கலமானவர்கள்.

கடந்த 2015 ஆண்டு முதல்  70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் சிரியாவிலிருந்து வெளியேறி கிரிஸிற்கு வந்து தஞ்சமடைந்துள்ளனர்.

கிரீஸிற்கு சொந்தமான இந்த சோமாஸ் தீவு கிழக்கு ஏஜியன் கடலில் துருக்கி கடலோரத்திற்கு அண்மையில் உள்ளது. இத் தீவில், வீட்டில் உள்ள வசதிகளுக்கு சற்றே வசதி குறைவான வசதிகளுடன் கட்டப்பட்ட 700 வீடுகள் இங்குள்ளன. இவற்றில் 4000 பேர் மிகவும் நெரிசலான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிரேக்க தீவில் முகாம்களின் தங்கும் வசதிகளைப் பற்றி  மீண்டும் மீண்டும் மனித உரிமைக் குழுக்களால் விமர்சிக்கப்பட்டுள்ளன. அகதிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய எண்ணிக்கையில் அதிகமாவதால் ஏற்படும் பின்னடைவும் இப்பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது என்று கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x