Published : 17 Mar 2019 03:40 PM
Last Updated : 17 Mar 2019 03:40 PM
மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை மறறும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியன் மக்கள் இடாய் புயலில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஐநா மற்றும் அரசு உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மொஸாம்பிக்கின் பெய்ரா நகரில் விமானநிலையம் மூடப்பட்டுவிட்டது, இங்கு மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டதோடு, பல வீடுகள் அழிக்கப்பட்டன.
கடந்த வியாழன் இரவு தாக்கத் தொடங்கிய புயல் ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய இடங்களுக்கு மேற்கு நோக்கி நகர்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்ப்புக்குள்ளாகினர். குறிப்பாக இதன் தாக்கம் மொஸாம்பிக் கிழக்கு எல்லைப் பகுதிகளில் இருந்தது.
வீடுகள், பள்ளிகள், தொழில்கள், மருத்துவமனைகள் மற்றும் சூறாவளி மூலம் போலீஸ் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளப்பெருக்குக்கில் சிக்கியபோது, தங்கள் உயிர்களை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள மேட்டுப்பாங்கான இடங்களைத் தேடி, தங்கள் உடைமைகளை கைவிட்டனர்
ஐநா அமைப்புகளும், செஞ்சிலுவை சங்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றன.
மொஸாம்பிக் அதிபர் பிலிப் நியூஸி வானொலியில் பேசுகையில், வெள்ளம் பாய்ந்துள்ள இடங்களில் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க விமானங்களை தரையிறக்குவது மிகவும் கடினமாகியுள்ளளது என்றும் மிகவும் கவலைக்குரிய வகையில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் என்று குறிப்பிட்டார்.
வெள்ளம்பாதித்த பகுதிகளில் உள்நாட்டு பேரிடர் மீட்பு சேவைகள் வேகமாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதால் இங்கு 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கடும் சிக்கல்களை சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT