Last Updated : 05 Feb, 2019 04:55 PM

 

Published : 05 Feb 2019 04:55 PM
Last Updated : 05 Feb 2019 04:55 PM

உலக சுற்றுலாவுக்காக நிதி திரட்ட 4 மாதக் குழந்தையை ஆபத்தான முறையில் தூக்கி வீசி சாகசம் செய்த கொடூரம்: தம்பதி கைது

உலகச் சுற்றுலா செல்வதற்காக நிதி திரட்டும்பொருட்டு, தங்களின் 4 மாதப் பெண் குழந்தையை ஆபத்தான முறையில் தூக்கி வீசி சாசகம் செய்த ரஷ்யத் தம்பதி மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

28 வயது ஆண் மற்றும் அவரின் 27 வயது மனைவி ஆகிய இருவரும் கோலாலம்பூரில் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

 

ஃபேஸ்புக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, 90 விநாடி வீடியோ ஒன்று வைரலானது. அதில் ப்ளூ ஷார்ட்ஸ் மற்றும் வெள்ளை  டி-ஷர்ட் அணிந்த மனிதர் ஒருவர், தனது கால்களுக்குக் கீழேயும் தலைக்கு மேலேயும் கைக்குழந்தையை தூக்கித் தூக்கிப் போட்டு விளையாடினார். பின்னணியில் ஏதோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது.

 

அந்த ஆணின் மனைவி கீழே தரையில் அமர்ந்திருந்தார். அவரின் கையில், ''உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு நிதி தேவை'' என்று எழுதப்பட்டிருந்த பதாகை இருந்தது.

 

ஏராளமான மக்கள் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கூட்டத்தில் இருந்து ஆண் குரல் ஒன்று, ''இது முட்டாள்தனமான ஒன்று. இப்படி நீங்கள் செய்யக்கூடாது'' என்று ஒலித்தது.

 

இந்நிலையில் வைரலான வீடியோவைக் கொண்டு மலேசிய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ரஷ்யத் தம்பதியைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய கோலாலம்பூர் காவல்துறை தலைவர் மஸ்லான் லசீம், ''திங்கட்கிழமை அன்று அவர்களைக் கைது செய்தோம். 4 மாதப் பெண் குழந்தையைக் கொடுமைப்படுத்தியது தொடர்பாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x