Published : 25 Feb 2019 06:37 PM
Last Updated : 25 Feb 2019 06:37 PM
சிரியாவில் தங்கள் பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமைகளாக கடத்திச் சென்ற பெண்களில் 50 பேர்கள் கொல்லப்பட்டு அவர்கள் தலைகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பிரிட்டனின் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (SAS)பகீர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டெய்லி மெய்ல் தனது செய்தி அறிக்கையில், யாஜிடி பெண்களைக் கடத்திச் சென்று அவர்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திப் பிறகு அவர்களைக் கொன்று தலைகளை குப்பைத்தொட்டியில் வீசியிருப்பதாக பயங்கரமான ஒன்றை தெரிவித்திருந்தது. அதாவது இராக் எல்லை அருகே கிழக்கு சிரியாவில் இயூப்ரேட்ஸ் கரைகளில் இவர்கள் தலைகளைத் தூக்கி எறிந்து விட்டுச் செல்கிறது ஐஎஸ்.
“தோற்கும் தருணத்தில் துரதிர்ஷ்டவசமான இந்த அப்பாவிப் பெண்களை கோழைத்தனமாகக் கொன்று கொடூரமாக அவர்கள் தலைகளை ஆங்காங்கே போட்டு விட்டுச் செல்கிறது ஐஎஸ்” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தகைய கொடூரச் செயல்களுக்கான காரணங்கள் என்பது ஒருவருக்கும் புரிய முடியாதது. பாக்ஹூசில் பிரிட்டன் எஸ்.ஏ.எஸ் ராணுவம் கண்டதை அவர்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது ‘அபோகலிப்ஸ் நவ்’ என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி போல் இது இருப்பதாக பிரிட்டன் எஸ்.ஏ.ஏஸ் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
எஸ்.ஏ.எஸ். ராணுவம் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தபோது இவர்கள் நகரத்தின் அடியில் தோண்டி வைத்த குகைகளுக்குள் சென்று பதுங்கியுள்ளனர். பாக்ஹூசில் இன்னமும் கூட சாதாரண மக்களோடு மக்களாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக எஸ்.ஏ.எஸ். கருதுகிறது.
ஐஎஸ் குகைகளை இன்னும் குடைந்தால் என்னவெல்லாம் கொடூரங்கள் நம் கண்முன் விரியுமோ என்று எஸ்.ஏ.எஸ். படையினர் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT