Published : 23 Sep 2014 10:49 AM
Last Updated : 23 Sep 2014 10:49 AM
செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா அனுப்பிய மாவென் ஆய்வுக்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, அதனைச் சுற்றிவரத் தொடங்கியுள்ளது.
சுமார் 10 மாதங்களில், 71.1 கோடி கி.மீ. பயணத்துக்குப் பிறகு செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை நேற்று முன்தினம் அடைந்துள்ளது மாவென். பூமி அல்லாத ஒரு கிரகத்தின் வளிமண்டல சூழலை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு இலக்கை அடைந்த முதல் ஆய்வுக்கலம் இதுவாகும்.
செவ்வாய்கிரகம் தன் வளிமண்டலத்தை இழப்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே உள்ளது. அதனை ஆய்வு செய்வதற்காகவே மாவென் அனுப்பப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் மாவென் ஆய்வு செய்யும். மாவென் தனது இலக்கை அடைந்துள்ளதற்கு, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT