Published : 25 Feb 2019 07:35 PM
Last Updated : 25 Feb 2019 07:35 PM
அணுஆயுதப் போர் என்று வந்து விட்டால் தாங்கள் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் ‘ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணை’ அமெரிக்க ராணுவ நிலைகளை 5 நிமிடங்களுக்குள் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க ராணுவ மையங்களைப் பட்டியலிட்டு ரஷ்ய தொலைக்காட்சி தன் செய்தி அறிக்கையில் கொக்கரித்துள்ளது.
தாக்குதல் இலக்கில் பெண்டகன், மேரிலேண்ட் கேம்ப் டேவிட் ஆகிய இடங்களையும் அந்த செய்தி அறிக்கை குறிப்பிட்டது.
அதாவது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இருந்து வந்த பனிப்போர் காலக்கட்டத்தில் ஆயுதக்கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் உள்ளது போல் அமெரிக்கா ஐரோப்பாவில் அனுசக்தி ஏவுகணைகளை கொண்டு வந்து நிறுத்தும் என்ற செய்திகளை அடுத்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இப்படி ஏதாவது அமெரிக்கா செய்தால் ஐரோப்பாவில் அமெரிக்க கடல்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணைகளை நிறுத்துவோம் என்று மிரட்டினார்.
ஆனால் அமெரிக்காவுக்கு அப்படிப்பட்ட திட்டம் எதுவும் இல்லை என்று அமெரிக்கா ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ள நிலையில் தற்போது 5 நிமிடங்களில் அமெரிக்க ராணுவ நிலைகளைக் காலி செய்வோம் என்று ரஷ்ய தொலைக்காட்சி கொக்கரித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
புதிய ஆயுத வியாபார மோதலில் விருப்பம் இல்லை என்று ரஷ்ய அதிபர் தெரிவித்திருந்த போதிலும் தற்போது போர் முழக்கங்களை இந்நாடும் பேசத் தொடங்கியுள்ளது.
ஞாயிறன்று ரஷ்ய தொலைக்காட்சியில் இந்தச் செய்தியினை தொகுத்து வழங்கிய கிசிலியோவ் அமெரிக்க வரைபடத்தைக் காட்டி அணுப்போர் என்று வந்துவிட்டால் எந்தெந்த நிலைகளை ரஷ்யா தாக்கும் என்று காட்டினார்.
அந்த ரஷ்ய தொலைக்காட்சி செய்தி அறிக்கை பற்றி கிரெம்ளின் அதிகாரிகளிடம் கேட்ட போது, அரசு தொலைக்காட்சி எடிட்டோரியல்களில் தலையிடமாட்டோம் என்று பதிலளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT