Published : 01 Feb 2019 12:17 PM
Last Updated : 01 Feb 2019 12:17 PM
டெல்லியிலிருந்து புறப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டோக்கியோவில் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையிலிருந்த பனிப்பொழிவுளை தகர்த்துச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் விமான நிலையத்தின் பிரதான மையத்தின் ஒரு பகுதி மூடப்படுவுதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கசுஹியோ மரியோ ஏஎப்பியிடம் தெரிவித்த விவரம்:
டெல்லியிலிருந்து வந்த போயிங் 787 ஜெட் விமானம் டோக்கியோ நாரிட்டா விமான நிலையத்தில், இன்று காலை ஓடுபாதையிலிருந்த பனிப்பொழிவுளை தகர்த்துச்சென்று விபத்துக்குள்ளானது. எனினும் அதிர்ஷ்டவசமாக அதில வந்த 201 பயணிகளும் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் உயிர் தப்பினர். யாருக்கும் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை.
இவ்விபத்து விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்றை மூடும் நிலைக்கு தள்ளியது. விமானம் பாதுகாப்பு பிராந்தியத்தைக் கடந்து ஓடியதாலேயே விமான ஓடுபாதை மூடவேண்டியே நிலை ஏற்பட்டது.
விபத்துக்கு காரணம் உடனடியாக தெரியவில்லை ஆனால் என்எச்கே பொது வானொலி தெரிவிக்கையில், விமானத்தின் டயர்கள் ஓடுபாதையோடு ஒட்டியிருந்த அரிதான பனிப்பொழிவுகள் மீது சற்றே இடறியதே இவ்விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நாரிட்டாவைச் சுற்றியுள்ள பகுதி உள்ளிட்ட கிழக்கு ஜப்பான் பகுதியில் உள்ள காண்டோ பிராந்தியத்தில் பனிப்பொழிவு குறைந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓடுபாதைகள் மற்றும் டாக்ஸிபாதைகள் ஆகியவை தெளிவாக இருந்த போதினும், விமான நிலையத்தில் தரையில் தரையில் பனிப்பொழிவுகள் பரவியிருப்பதை தொலைக்காட்சியின் காட்சிகள் காட்டுகின்றன.
இவ் விபத்து குறித்த வீடியோவில் விமானம் விபத்துக்குள்ளானபோதும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை காணமுடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT