Published : 02 Jan 2019 07:08 PM
Last Updated : 02 Jan 2019 07:08 PM
நாடு விட்டு நாடு புலம்பெயரும் கட்டிடங்களில் கூடு கட்டி வாழும் ஸ்டார்லிங் என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்ட பறவையினம் இஸ்ரேலில் வானில் ஒரு அரிய காட்சி அதிசய நடனத்தை அரங்கேற்றியது.
நெகேவ் பாலைவனத்தில் ஒவ்வொரு நாள் காலையும் இந்த அரிய ஒரு வடிவத்தை அவையனைத்தும் வானில் உருவாக்கி 2 வாரங்களாக தினமும் அசத்தி வருகிறது.
இந்த பறவையினம் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து செல்பவை. இது வானில் இருண்ட ஒரு சுருள் வடிவ எழும்பும் ஒரு ராட்சத பாம்பு போன்ற வடிவம் உருவாக்குகிறது. மெல்லிய ரீங்காரமும் இட்டு அது நகர்ந்து செல்கிறது.
இவை பெரிய அளவில் தங்களை ஒன்று சேர்த்துக் கொள்ளும் பழக்கம் உடையது இது குறித்து இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக் கழக பறவை ஆராய்ச்சியாளர் யோஸி லிஷெம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, இப்படி பெரிய அளவில் பெரிய ஒரு புரியாத அரிய வடிவத்தில் வானில் பறப்பதன் மூலம் தன்னை வேட்டையாடும் பறவையினத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்கிறது என்கிறார்.
இதன் ஆசிய பெரிய வகையின மாதிரிதான் மைனாக்கள் என்று அழைக்கப்படுவதாகத் தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு வகையினங்கள் இதில் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT