Published : 17 Dec 2018 08:08 AM
Last Updated : 17 Dec 2018 08:08 AM
தமிழகத்தைச்சேர்ந்தவரான சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தில் அதிகாரியாக சேர்ந்து படிப்படியாக முன்னேறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதன் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) உயர்ந்தார். இப்போது அவர் கூகுள் நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறார். ஆனாலும் கூகுள், விமர்சனங்களுக்கும் இலக்காகி வருகிறது.
குறிப்பாக பேஸ்புக் - அனலிட்டிகா சர்ச்சையை அடுத்து பயனாளிகள் தகவல்களின் தனியுரிமை தொடர்பான விவாதம் வெடித்திருக்கும் நிலையில், கூகுளின் தகவல் சேகரிப்பு உத்திகளும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதுதவிர, பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சினையில் கூகுள் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கும் நிலையும் இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் சமூக ஊடகங் கள் வாயிலாக வெளிநாட்டு தலையீடு இருந்ததாக எழுந்த புகார் தொடர்பான கேள்வியும் அமெரிக்காவை உலுக்கியது. பொய்ப் பிரச்சாரம் மற்றும் பொய்ச் செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் பங்கும் ஆழமான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் விசாரணைக்குழு முன்பு ஆஜராகி பதில் சொல்ல வேண்டியிருந்தது.
பேஸ்புக் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் முதலில் அதன் சிஇஒ மார்க் ஜூகர்பர்க் ஆஜராகி பதில் அளித்தார். அதன் பிறகு ட்விட்டர் சிஇஒ ஆஜாரானார். இந்த விசாரணைக்கு கூகுள் நிறுவனத்துக்கும் அழைப்பு அனுப்பப்பட்டாலும், நிறுவனர் லாரி பேஜ் அல்லது சிஇஒ சுந்தர் பிச்சையை கூகுள் அனுப்ப மறுத்துவிட்டது.
இந்நிலையில்தான், கூகுளின் சீன தேடியந்திர திட்டம் தொடர்பான சர்ச்சை தீவிரமான நிலையில் நாடாளுமன்ற விசாரணைக்கு கூகுள் அழைக்கப்பட்டது. அப் போது சுந்தர் பிச்சை ஆஜரானார்.
மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை யின்போது, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் கூகுளின் தேடல் முடிவுகள் தங்கள் கட்சிக்கு எதிர்மறையாக அமைந்திருப்பது ஏன் என கேள்விகளால் துளைத் தெடுத்தனர். சுந்தர் பிச்சை அவற்றுக்கு எல்லாம் அமைதியாக, நிதானமாக பதில் அளித்தார்.
தேடல் முடிவுகளில் அரசியல் சார்பு தொடர்பான கேள்விகளுக்கு, ‘இந்நிறுவனத்தை எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல் வழிநடத்தி வருவதாகவும், தங்கள் சேவைகள் அதே விதமாக தொடர் வதை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் தெரி வித்தார். எதிர்மறையான முடிவுகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்ட போது, கூகுள் தொடர்பான தேடலுக் குகூட எதிர்மறையான முடிவுகள் வருகிறது என்று கூறினார்.
முட்டாள் எனும் பதம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர் பான கேள்விக்கு, கூகுள் பொருத் தமான தன்மை உள்ளிட்ட 200-க் கும் மேற்பட்ட அம்சங்களின் அடிப் படையில் தேடல் முடிவுகளை பட்டி யலிடுவதாக கூறினார். தொடர்ந்து துருவி துருவி கேட்கப்பட்டபோது, தேடல் முடிவுகளில் கூகுள் தலை யிட்டு சார்பை ஏற்படுத்துவதில்லை என்பதை உணர்த்தினார். இந்த விசாரணையின்போது, சுந்தர் பிச்சை பதில் அளித்த விதத்தை வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டன.
விசாரணைக்கு நடுவே நெகிழ்ச்சி
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபாலும் இந்த நிகழ் வில் பங்கேற்றார். அவர் உறுப் பினர்களின் அனுமதி பெற்று பேசும் போது, “அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனத்தின் உயர் பதவி யில் இருக்கும் சுந்தர் பிச்சை, இந்தி யாவில் நான் பிறந்த தமிழகத்தில் பிறந்தவர். இந்த அளவுக்கு நம் நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்திருப்பதில் மகிழ்ச்சி. நன்றி சுந்தர் பிச்சை” என்றார். இதைக் கேட்ட சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி அடைந்தார்.
கூகுள் குண்டு விநோதம்
கூகுள் மீது தொடுக்கப்பட்ட பல கேள்விகளில் பலரது கவனத்தை கவர்ந்தது கூகுளில் முட்டாள் எனும் பதத்தை தேடும்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் படம் ஏன் வருகிறது என்ற கேள்விதான். இதற்கு, இதில் எந்த உள்நோக்கமும் இல்லை ஏன்று கூறிய அவர், கூகுள் தேடல் செயல்படும் விதம் பற்றி விரிவாக விளக்கினார்.
தேடல் முடிவுகளில் கூகுளின் ஆழமான அல்கோரிதம்தான் தீர்மானிக்கிறது. இதில் கூகுள் நேரடியாக தலையிடுவதில்லை. ஆனால், சில நேரங்களில் கூகுள் அல்கோரிதம் செயல்படும் விதத்தை குறிப்பிட்ட விதமாக பயன்படுத்தும் வகையில் இணைய பக்கங்களை அமைத்து அதன் தேடல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இப்படி குறிப்பிட்ட கீவேர்டுக்கான தேடலுக்கு குறிப்பிட்ட பக்கத்தை தேடல் முடிவில் முன்னிலை பெறும் வகையில் செயல்படும் உத்தி கூகுள் குண்டு (Google bombing) என அழைக்கப்படுகிறது. இந்த உத்தியை கட்டுப்படுத்தும் வகையில் கூகுள் நடவடிக்கை எடுத்திருந்தாலும் அதை மீறி, சில நேரங்களில் கூகுள் குண்டு தலைகாட்டுவதுண்டு. அமெரிக்க அதிபர் டிரம்ப் விஷயத்திலும் இப்படிதான் நிகழ்ந்திருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT