Published : 17 Dec 2018 08:14 AM
Last Updated : 17 Dec 2018 08:14 AM
கடந்த 4 வாரங்களாகவே பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மட்டுமல்லாமல் எங்கு பார்த் தாலும் போராட்டம், கலவரம் தான். இது அதிபர் எம்மானு வேல் மேக்ரானுக்கு பெரும் தலை வலியாக உருவெடுத்துள்ளது.
டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடங்கிய போராட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நினைக்கும் மேக்ரானின் அரசியல் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது. கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல் விலைகள் 20 சதவீதத்துக்கு மேல் அதிகரித்த பிறகும், மீண்டும் விலையேற்றமா என எதிர்த்து தான் மக்கள் டிராபிக் போலீஸார் பயன்படுத்தும் மஞ்சளாடையை அணிந்து போராட்டத்தில் குதித்த னர். விரைவில் இந்த போராட்டம் பெரும் பணக்காரர்களுக்கு பிரான்ஸ் அரசு அளிக்கும் வரிச் சலுகைக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்துக்கும் எதிராக திரும்பியது.
இந்தக் கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக் கானோர் காயமடைந்தனர்.இதனால் பல கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த களேபரத்துக்கு இடையில், இந்த போராட்டத்தைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவும் பிரான்ஸும் முயற் சிப்பதாக புகார்கள் எழுந்தன.
யார் தலைமையிலும் இல்லாமல் எந்தக் கட்சியின் ஆதரவும் இல் லாமல் தானாகத் தொடங்கியது தான் மஞ்சள் ஆடை போராட்டம். இது நாடு முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. அடுத்த மாதம் முதல் அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்த சில விலையேற்ற நடவடிக்கைகளை அதிபர் மேக்ரான் வாபஸ் பெற்ற பிறகும் போராட்டம் தணியவில்லை. போராட்டமும், வன்முறையும் காரை எரிப்பதும் தொடர்ந்தன. டிசம்பர் 10-ம் தேதி மேக்ரான் ஆற்றிய உரை தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், 64 சதவீத மக்கள் மஞ்சள் ஆடை இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது தெரியவந்தது.
மேக்ரானின் அறிவிப்பு போராட் டக்காரர்களை சமாதானப் படுத்தவில்லை என்பதும் தெரிய வந்தது. மேக்ரான் அறிவித்த சலுகைகள் போதாது என்றும் மிகவும் தாமதமான அறிவிப்பு என்றும் ஒரு போராட்டக்காரர் வர்ணித்தார். மேலும் யானைப் பசிக்கு சோளப் பொறி என்றும் கூறியிருந்தார்.
மோசமான வரி விதிப்பு என்பது எரிபொருளோடு நின்றுவிட வில்லை. சுகாதாரத் துறை உள் ளிட்ட பொதுத்துறை ஊழியர் களுக்கு சம்பளம் மிகவும் குறை வாக இருப்பதாகவும் போராட்டக் காரர்கள் குறிப்பிட்டனர். அவர் களுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் குதித்த மாணவர்கள், கல்வித் துறையில் சீர்திருத்தங் களைக் கொண்டு வர வேண்டுமென கோஷம் எழுப்பினர். போராட்டத்தால் ஏற்பட்ட இழப்பையும் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட புதிய சலுகைகளால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் வரி செலுத்தும் பொதுமக்கள்தான் தாங்க வேண்டியிருக்கும். இல்லா விட்டால், கிராமப்புறங்களில் அளிக்கப்படும் பொது சேவைகளை அரசு குறைக்க வேண்டியிருக்கும்.
`மத்தளத்துக்கு இருபக்கமும் இடி’ என்பதுபோல், அதிபர் மேக்ரானை இடதுசாரிகளும் வலதுசாரிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர். `உலகமயமாக்கலின் தாக்கத்தில் இருந்து பிரான்ஸ் மக்களை காக்கத் தவறி விட்டார்’ என இடதுசாரிகள் குறை கூறுகின்றனர். `அரசுக்கு எதிரான போராட்டத்தை சலுகைகள் கொடுத்து அடக்கி விடலாம் என மேக்ரான் தவறான எண்ணத்தில் இருக்கிறார்’ என வலதுசாரிகள் விமர்சிக்கின்றனர். நாட்டு மக்க ளுக்கு ஆற்றிய உரையில் தேவையில்லாத குடியுரிமை போன்ற பிரச்சினைகளை பேசிய தாக பலர் நினைக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் மேக்ரான் அரசு ஆடிப்போயிருக்கிறது. மேக்ரான் உரைக்குப் பிறகு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் அவருக்கான ஆதரவு 25 சதவீதத்துக்குள் தான் இருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. அரசியல் கட்சிகளால் மேக்ரானுக்கு எந்த ஆபத்தும் இல்லை. பெரும் பணக்காரர் களுக்கு ஆதரவானவர் மேக்ரான் என்ற அவப்பெயரை நீக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்துத்தான் அவர் மீதான மதிப்பு இருக்கும். இந்தக் குற்றச்சாட்டை மேக்ரான் மறுத்திருக்கிறார்.
இதற்கிடையில், பிரான்ஸின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தலை யிடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரிதாகக் கவனம் பெறவில்லை. இதற்கு, எது எங்கு நடந்தாலும் அதற்கு அமெரிக்காவும் ரஷ்யா வும் செய்யும் சதி தான் காரணம் எனக் கூறும் வழக்கம் அதிகரித்திருப்பதுதான் காரணம். `பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத் தால் பிரான்ஸில் எதிர்ப்பு கிளம்பி யிருக்கிறது. எங்கு பார்த்தாலும் போராட்டம் வன்முறை’ என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டுக்கு பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. `எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்’ என பிரான்ஸ் கூறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி விடுகிறது ரஷ்யா என எழுந்துள்ள குற்றச் சாட்டை ரஷ்யா வன்மையாகக் கண்டித்துள்ளது. இது எங்களை அவமதிக்கும் செயல் என்றும் கூறியுள்ளது.
டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.
வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT