Published : 23 Nov 2018 12:45 PM
Last Updated : 23 Nov 2018 12:45 PM
அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் சிறிய விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சிறிய ரக விமானத்தை அப்பகுதி சிறுவர்கள் திருடிச் சென்றனர்.போலீஸாரின் அறிவுறுத்தலின்படி பத்திரமாக தரையிறங்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
அதன்பின் போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் 24 மைல் பறந்தபின் தரையிறங்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டு, பாதுகாப்பாகத் தரையிறங்கினார்கள்.
அமெரிக்காவில் தற்போது நன்றி செலுத்தும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கொண்டாட்டங்களில் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தா நகரில் உள்ள சிறிய உள்நாட்டு விமான நிலையத்தில் விமானம் நேற்றுமுன்தினம் நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது, 14 வயது, 15 வயது நிரம்பிய இரு சிறுவர்கள், டிராக்டர் ஓட்டிக்கொண்டு விமான நிலையப் பகுதிக்குள் வந்தனர். விமானத்தில் விமானி இல்லாமல் விமானம் நிற்பதை அறிந்த இரு சிறுவர்கள் விமானத்தை எடுத்து ஓடுபாதையில்செலுத்தி பறந்தனர். இதைப் பார்த்த விமான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் விமான நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்பின் விமான நிலைய போலீஸார் அந்த இரு சிறுவர்களிடம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசி தரையிறங்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தரையிறங்கும் முறை குறித்தும், எப்படித் தரையிறங்க வேண்டும் என்பது குறித்தும் கூறி பத்திரமாகத் தரையிறங்கினார்கள். இந்த இரு சிறுவர்களும் ஏறக்குறைய 24 மைல் அளவுக்குப் பறந்தபின் தரையிறங்கியுள்ளனர்.
இதுகுறித்து உத்தா கவுண்டி போலீஸார் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், ‘‘14 வயது,15 வயது கொண்ட இரு சிறுவர்கள் உத்தா கிழக்குப்பகுதியில் உள்ள ஜென்சன் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடிச் சென்றனர். இருவரும் 24 மைல் சுற்றளவுக்கு தாழ்வாகப் பறந்தனர்.
பின் போலீஸாரின் அறிவுறுத்தலின்படி அவர்கள் இருவரும் விமானத்தை தரையிறக்கினார்கள். பாதுகாப்பாகத் இறங்கும் வழிமுறைகளையும் தெரிவித்தோம்.
தரையிறங்கியபின் இரு சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பெயரில் வெர்னல் நகரில் உள்ள சிறுவர்கள் கண்காணிப்பு மையத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT