Published : 03 Nov 2018 10:56 AM
Last Updated : 03 Nov 2018 10:56 AM
எகிப்தில் குழந்தைக்கு ஞானஸ்நானம் முடித்துத் திரும்பிய 7 கிறிஸ்தவர்கள், ஐஎஸ் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். குழந்தைகள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர்.
இந்த கொடூர சம்பவம் மின்யா மாகாணத்தில் உள்ள காப்டிக் மடாலயத்தில் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து காப்டிக் தேவாலய செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர்'' என்றார்.
ஐஎஸ் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் வேட்பாளரின் மகள் உட்பட 6 பெண்கள் மற்றும் மூத்த முஸ்லிம் சகோதரத்துவ தலைவர் கைரத் அல்-ஷட்டர் ஆகியோரை எகிப்து பாதுகாப்புப் படைகள் கைது செய்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அதே நேரத்தில், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஐஎஸ் உடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது.
இதுகுறித்து தீவிரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ''ஜிகாதிகள் ஆயுதங்களுடன் அவர்களைத் தாக்கினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.18 பேர் காயமடைந்தனர்.
விசுவாசம் இல்லாத எகிப்து ஆட்சியில் எங்களுடைய புனித சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் பழிவாங்கவே தாக்குதலில் ஈடுபட்டோம்; இன்னும் ஈடுபடுவோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT