Last Updated : 19 Oct, 2018 12:29 PM

 

Published : 19 Oct 2018 12:29 PM
Last Updated : 19 Oct 2018 12:29 PM

உலகிலேயே முதல் முறை; கனடாவில் கஞ்சா விற்பனைக்கு அனுமதி: நூறு ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட தடை விலகியது

உலகிலேயே முதன்முதலாக கஞ்சாவை வியாபாரமயமாக்கியுள்ள நாடாக கனடா விளங்குகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் கனடா அரசு வெளியிட்டது.

பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கஞ்சா பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், டொராண்டோ மற்றும் வான்கூவர் போன்ற மிகப்பெரிய நகரங்களில் தற்பொழுதும்கூட கஞ்சா விற்பனைக்கென்று எந்தவொரு கடையும் ஈடுபடவில்லை.

கனடாவின் கிழக்கு மாகாணமான நியூஃபவுண்ட்லேண்டிலும் லாப்ராடூரிலும் கஞ்சாவைப் புகைக்க விரும்பும் ஆர்வலர்கள் நள்ளிரவு முதல் விற்பனை என்ற செய்தியைக் கேட்டு துள்ளிக் குதித்தனர்.

கனடாவில் இந்தநாள் வரலாற்றில் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு முழுவதும் இருந்த தடை நீங்கியது. இதன்மூலம் வயது வந்த கனடிய மக்கள் சட்டபூர்வமாக கஞ்சாவைப் புகைக்க முடியும்.

கனடாவின் மிகப்பெரிய நகரங்களில் உள்ள கடைகளில் இதற்கான விற்பனைகள் எதுவும் இல்லை. அதனால், நுகர்வோர்கள் ஆன்லைனில் பதிவுசெய்து மாகாண அரசாங்கங்கள் அல்லது உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x