Published : 16 Oct 2018 12:45 PM
Last Updated : 16 Oct 2018 12:45 PM
மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரும் சிறந்த கொடை வள்ளலுமான பால் ஆலன் புற்றுநோயால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.
நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆலன், பில் கேட்ஸின் பால்ய நண்பர். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய இருவரும் 43 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர்.
மைக்ரோசாஃப்டில் தொடர்ந்து புதிய விஷயங்களைப் புகுத்தி, அதனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஆலன், தனது 30 வயதுக்குள், மைக்ரோசாஃப்டை உச்சம் தொட வைத்தார்.
இடையில் புற்றுநோய் தாக்கியதால், வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். மீண்டு வந்த அவர் தனது சகோதரி ஜோடியுடன் இணைந்து தனியார் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டது.
இந்நிலையில் தனது 65 -வது வயதில் ஆலன் காலமானார். அவரின் மறைவுக்கு மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா இரங்கல் தெரிவித்துள்ளார்.
உலகின் 44-வது பணக்காரரான ஆலன், தனது பணத்தில் பெரும்பாலான தொகையை தர்ம காரியங்களுக்காகச் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT