Published : 10 Aug 2014 01:11 PM
Last Updated : 10 Aug 2014 01:11 PM

தாடி வைத்த சீக்கியப் பெண் படம் புகைப்பட கண்காட்சிக்குத் தேர்வு

தனது தாடியால் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஹர்ணாம் கவுர் (23). இவருக்கு 'பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்' எனும் குறைபாடு உள்ளது.

இதனால் இவரின் 16 வயதிலிருந்து முகத்தில் முடிகள் தோன்றி தாடி வளர ஆரம்பித்தது. இதனால் இவர் வெளியில் எங்கு சென்றாலும் பிறரின் கேலிக்கு ஆளாகிறார். ஒவ்வொரு முறையும் முகச்சவரமும் செய்துகொள்கிறார். இவ்வாறு அவர் கேலிக்கு ஆளாகும்போதெல்லாம் இவரின் தம்பி குர்தீப்தான் இவருக்கான ஒரே ஆறுதலாக இருக்கிறார்.

இப்படி கேலிக்கு ஆளான ஹர்ணாம் கவுர் தற்போது மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

காரணம் 'பியர்ட் சீசன்' எனும் தொண்டு நிறுவனம், இந்த ஆண்டு லண்டனில் காட்சிப்படுத்த உள்ள உலகின் சிறந்த 60 தாடி வைத்த மனிதர்களின் புகைப்படங்களில் இடம்பிடித்திருக்கும் ஒரே பெண் புகைப்படம் இவருடையது மட்டும்தான்.

இவர் தற்போது ஆசிரியராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x