Published : 03 Oct 2018 05:45 PM
Last Updated : 03 Oct 2018 05:45 PM
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயன்சஸ், 2018ம் ஆண்டு வேதியியல் துறையில் பாதைத்திறப்பு ஆய்வுக்காக, பிரான்சிஸ் ஹெச்.ஆர்னால்ட் மற்றும் ஜார்ஜ் பி.ஸ்மித் மற்றும் சர் கிரிகரி பி. வின்ட்டர் ஆகியோருக்கு நோபல் பரிசை அறிவித்துள்ளது.
இதில் பிரான்சிஸ் ஹெச்.ஆர்னால்ட் என்பவர் அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்த ஆய்வாளார் ஆவார், இவருக்கு “நொதியங்களின் (Enzymes) நெறிவழிப்படுத்தப்பட்ட பரிணாமம்” என்ற ஆய்வுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு விஞ்ஞானியான ஜார்ஜ் பி.ஸ்மித் என்பவரும் அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர். மற்றொருவரான சர் கிரிகரி பி.வின்ட்டர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் எம்.ஆர்.சி. மூலக்கூறியல் உயிரியல் பிரிவில் ஆய்வாளராவார். இவர்கள் இருவரும் நோய் எதிர்ப்பொருள் மற்றும் புரதங்களின் உண்ணிகள் அல்லது விழுங்கிகள் பற்றிய முக்கிய ஆய்வுக்காக நோபல் வென்றுள்ளனர்.
இதில் நொதியங்கள் பற்றிய ஆய்வு எரிபொருள் முதல் மருத்துகள் உற்பத்தி வரை பலதுறைகளில் மானுட குல வளர்ச்சிக்குப் பயன்படுவதாகும். அதே போல் பேஜ் டிஸ்ப்ளே முறையைப் பயன்படுத்தி பரிணாமம் அடையும் நோய் எதிர்ப்புப் பொருள், கேன்சர் உள்ளிட்ட ‘தற்தடுப்புச் சக்தி கொண்ட’ நோய்களை எதிர்க்கவல்லது. சில சந்தர்ப்பங்களில் ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு பரவும், தாவும் மெட்டா ஸ்டேடிக் கேன்சர்களையும் எதிர்க்கவல்லது.
உயிர்வாழ்க்கையின் ரசாயன உபகரணமான புரோட்டீன்கள் என்பது தனிப்பயனாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு இன்று பிரமிக்கத்தக்க வகையில் நினைத்துப் பார்க்க முடியாத பல்லுயிரிப் பெருக்கத்துக்கு வழிவகை செய்துள்ளது.
இந்த நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள் பரிணாமம் எனும் ஆற்றலினால் உத்வேகம் பெற்றவர்கள், எனவே மரபணு மாற்றம், தேர்வு (செலக்ஷன்), போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் மனிதனின் வேதியியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்டும் புரதங்களைக் கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வுகள் பிற்பாடு பெரிய அளவில் மானுட குலத்துக்கு பயனளிக்கும் ஆய்வுகளின் ஆரம்பக் கட்டம்தான் என்று நோபல் அகாடமி தன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT