Last Updated : 06 Oct, 2018 08:52 AM

 

Published : 06 Oct 2018 08:52 AM
Last Updated : 06 Oct 2018 08:52 AM

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டு சிறை

ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ மியுங்-பாக்குக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

76 வயதான லீ மியுங் 2008 முதல் 2013 வரை தென் கொரியாவின் அதிபராக இருந்தார். இந்த நிலை யில் அவர் தனது ஆட்சிக்காலத் தின்போது ஊழல், மோசடிகளைச் செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கை சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணையின் முடிவில் லீ மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு 15 ஆண்டு கால சிறைத்தண்டனையை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறிய தாவது: அனைத்து வாதங்களையும் நிறைவுற்ற நிலையில் அனைத்தை யும் கருத்தில்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடும் தண்டனை வழங்குவது தவிர்க்க முடியாததாகிறது. குற்றம் சாட்டப் பட்டவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவருக்கு ரூ.85.10 கோடி அபராதத்தையும் நீதிபதி விதித்தார். உடல் நலக்குறைவு காரணமாக லீ மியுங் நீதி மன்றத்துக்கு வரவில்லை. முன்னாள் அதிபர் ஒருவருக்கு ஊழல், மோசடி வழக்கில் 15 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று லீ மியுங் மீது குற்றம்சாட்டப்பட்டது. அந்த நிறுவனம் தனது சகோதரருடையது என்று லீ தெரிவித்தார். மேலும் அந்த நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் பணத்தைப் பரிமாற்றம் செய்தது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் இதை லீ மறுத்தார். அரசியல் நோக்கங்களுக்காக தன் மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டதாக லீ அப்போது தெரிவித்தார். அதே நேரத்தில் அவருக்கு லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்ட சாம்சங் நிறுவனமும் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x