Published : 29 Oct 2018 12:04 PM
Last Updated : 29 Oct 2018 12:04 PM
இந்தோனேசிய விமானம் விமான் ஜேடி 610 பறக்க ஆரம்பித்த 13 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, கடலில் விழுந்தது.
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பினாங்கு நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான் ஜேடி 610 என்ற விமானம் திங்கட்கிழமை காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது.
விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதைத் தொடர்ந்து விமானம் கடலில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செய்தி வெளியானதைக் கேட்ட விமானப் பயணிகளின் உறவினர்கள் சோகத்தில் உறைந்தனர்.
அதிகத் திறன் வாய்ந்த போயிங் 737 மேக்ஸ் வகை விமான சேவை 2017-ல் தொடங்கப்பட்டது. லயன் ஏர்லைன்ஸின் மலேசியப் பிரிவான மலிண்டோ ஏர், சர்வதேச சேவையை முதலில் தொடங்கியது.
இந்தோனேசியாவின் நவீனமான மற்றும் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் சேவைகளில் ஒன்று லயன் ஏர்லைன்ஸ் ஆகும்.
கடந்த 2013-ம் ஆண்டில் போயிங் 737- 800 ரக ஜெட் விமானம், பாலி தீவு அருகே தரையிறங்கும்போது கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது விமானத்தில் இருந்த 108 பேர் உயிர் பிழைத்ததும் நினைவுகூரத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT