Published : 30 Oct 2018 08:15 AM
Last Updated : 30 Oct 2018 08:15 AM
இந்தோனேசியாவில் லயன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத் துக்கு சொந்தமான விமானம் கடலில் விழுந்து மூழ்கியதில் 189 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் தலை நகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 என்ற வகையைச் சேர்ந்தது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 189 பேர் இருந் தனர்.
ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் வானில் பறந்த 13 நிமிடங் களுக்குப் பிறகு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முழுமையாக இழந்தது. விமானத்தின் பயண நேரப்படி காலை 7.20 மணிக்கு பங்கல் பினாங் நகரை விமானம் அடைந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் வராத தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடைந்த பாகங்கள் மீட்பு
இந்த நிலையில், ஜகார்த்தா வின் இந்தியப் பெருங்கடல் பகுதியின் வடகடலில் உள்ள தன்ஜுங் பிரியோக் என்ற இடத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. மேலும் விமான எரிபொருள் கடல் நீரின் மேற்பரப்பில் பரவி திட்டுத் திட்டாகக் காணப்பட்டது.
இதையடுத்து, மீட்புப் படையினர், கடற்படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் நட வடிக்கை தொடங்கினர். மேலும், அதிநவீன மீட்பு ஹெலிகாப்டர்கள் மூலமும் தேடுதல் பணிகள் நடை பெற்று வருகின்றன. விமா னம் விழுந்த பகுதியில் பயணி களின் ஹேண்ட் பேக்குகள், அடையாள அட்டைகள், செல் போன்கள், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட உடைமை கள் கடலில் மிதப்பதை மீட்புப் படையினர் கண்டுபிடித்து அவற்றை கைப்பற்றினர்.
விபத்துக்குள்ளான விமா னம் கடலில் 30 முதல் 40 மீட்டர் ஆழத்துக்குள் விழுந்து கிடக்கலாம் என்று கருதப் படுவதால், அதற்கான தேடு தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
விமானத்துக்கும் விமான கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் தொடர்பு பதிவின் படி அந்த விமானம் விபத்துக்குள்ளானபோது 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண் டிருந்தது தெரிய வந்துள்ளது. அந்த உயரத்தில் இருந்துதான் விமானம் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் விழுந்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து லயன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத் தின் செய்தித்தொடர்பாளர் முகமது சயாகி கூறும் போது, “விமானத்தில் பயணித் தவர்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. இப்போது வரை விமானத்தில் இருந்து எந்த விதமான சமிக்ஞையும் கிடைக்கவில்லை. நம்பிக்கை யோடு தேடி வருகிறோம். கடற்படையினர், மீட்புப் படை யினர், இழுவை படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆழ்கடலில் நீச்சல் தெரிந்த வர்கள் மூலமும் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார்.
3 ஆயிரம் அடி உயரம்
மீட்புப் பணிகள் குறித்து இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு ஏஜென்சி இயக்குநர் பாம்பாங் சூர்யோ அஜி கூறும்போது, “இதுவரை 9 பைகளில் சிதறிய விமான பாகங்களைச் சேகரித்துள்ளோம். இந்த விபத் தில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பது எனது கணிப்பு. கடலில் இருந்து மீட்கப்பட்டவற்றை கிழக்கு ஜகார்த்தாவில் உள்ள பாயங் கரா தேசிய மருத்துவமனைக் குக் கொண்டு செல்கிறோம். சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கடலுக்குள் விமானம் பாய்ந்திருக்கக்கூடும். விமா னத்தில் இருந்த 189 பயணி களும் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.
விமானத்தின் முக்கிய பாகங்கள் கண்டெடுக்கப்பட வில்லை. சிதறிய பாகங்களை மட்டுமே சேகரித்துள்ளோம். விமானம் கடலில் விழுந்த பகுதி எது என சரியாகக் கண்டறிய முடியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி கள் நடைபெற்று வருகின் றன. மீட்புப் பணிகளில் இந்தோனேசிய கடற்படை யைச் சேர்ந்த கேஆர்ஐ ரிஜெல்-933 என்ற கப்பல் ஈடுபட் டுள்ளது. சுமார் 40 ஆழ்கடல் நீச்சல் வீர்கள் கடலில் இறங்கி தேடி வருகின்றனர். மொத்தம் 150 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
விமான விபத்து தொடர் பாக உயர்மட்டக்குழு விசா ரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரு வதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது. நேற்று மாலை விபத்து நடந்த இடத்தில் இருந்து சில சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கருப்புப் பெட்டி
விபத்து நடந்தபோது விமானி அறையில் நடந்த உரையாடல்கள் விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டியில் (பிளாக் பாக்ஸ்) பதிவாகி இருக்கும். இதையடுத்து, விமான விபத்து நடந்த கடல் பகுதியில் கருப்புப் பெட்டி யைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மீட்புப் பணி யில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, “கருப்புப் பெட்டி யைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கிறோம். கருப்பு பெட்டி கிடைத்தால் அதன்மூலம் விமானிகளுக்குள் நடந்த உரையாடல் பதிவுகள் கிடைக் கும். இதைத் தொடர்ந்து விமான விபத்துக்கான கார ணத்தையும் அறியமுடியும்” என்றார். இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விமானி டெல்லியைச் சேர்ந்தவர்
டெல்லியின் மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பாவ்யே சுனேஜாதான் இந்த விமானத்தின் பைலட் என்பது தெரியவந்துள்ளது. இதை விமான நிறுவனமும் உறுதி செய்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த விமானி பாவ்யே சுனேஜா, பைலட் பயிற்சியை முடித்து, எமிரேட்ஸ் விமானத்தில் பயிற்சி பைலட்டாகப் பணியாற்றிய நீண்ட அனுபவம் உள்ளவர். அதன்பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு பெல் ஏர் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து விமானம் இயக்குவதற்கு உரிமம் பெற்றுள்ளார்.
லயன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் கடந்த 2011-ம் ஆண்டு சுனேஜா பணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஏறக்குறைய 6 ஆயிரம் மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர் சுனேஜா. மேலும், துணை விமானியாக 5 ஆயிரம் மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவமும் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT