Published : 16 Aug 2018 08:40 AM
Last Updated : 16 Aug 2018 08:40 AM
‘வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல’ என்று ஒரு சொலவடை உண்டு. யானையை சின்னமாகக் கொண்ட அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் பதிவுகள் அதிரடியாக இருக்கின்றன. சமீபத்தில் ஃபின்லாந்து நாட்டின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற அமெரிக்க - ரஷ்ய அதிபர்கள் சந்திப்பின்போது அவர் தெரிவித்த கருத்துகள் அமெரிக்காவில் பலத்த எதிர்ப்பையும் பெரிய சர்ச் சையையும் தோற்றுவித்திருக் கிறது. எதற்கும் அசைந்து கொடுக் காத டொனால்ட் ட்ரம்ப், தான் சொன்ன கருத்தை மாற்றிக் கூறும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. அப்படி என்னதான் சொல்லிவிட்டார் ட்ரம்ப்? ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
2016-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலை யிட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு. ட்ரம்ப் ஹெல்சிங்கி போவதற்கு முன்னால் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ரஷ்யாவின் 12 ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்க தேர்தலில் குறுக்கீடு செய்ததாகவும் ஜனநாயகக் கட்சியினரின் இமெயில்களை சட்டவிரோதமாகக் கைப்பற்றி வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் சந்தித்துப் பேசிய பின்னர் பேட்டியளித்த டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் தலையீடு இல்லை என்று புடின் கூறுகிறார் என்றும் அதனை ஏற்றுக்கொள்வது போலவும் பேசினார். தனது நாட்டு புலனாய்வு அறிக்கைகளைப் புறந்தள்ளி விட்டு அமெரிக்காவுக்கு எதிரான ஒரு சர்வாதிகாரியின் வார்த்தையை ஏற்றுக் கொள்வதா என பலர் பொங்கியெழுந்துள்ளனர். இதில் ட்ரம்ப்பின் குடியரசுக்கட்சியினரும் அடக்கம் என்பது முக்கிய செய்தி.
ரஷ்யாவின் தலையீடு, குறுக்கீடு இரண்டு வழிகளில் இருந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள். முதலா வது சமூக ஊடகங்களான ஃபேஸ் புக் மற்றும் ட்விட்டர் மூலம் பொய்ச் செய்திகளைப் பரப்பி மக்களின் மனநிலையை மாற்றியது. இரண்டாவது டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹில்லாரி க்ளிண்டனது இமெயில் சர்வரை ‘ஹேக்’ செய்து அவரது இமெயில்களை வெளியிட்டது. ஹில்லாரி க்ளிண்டனின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் அளவுக்கு அவரது இமெயில்களில் என்ன இருந்தது என்ற கேள்வியை யாரும் கேட்க முன்வரவில்லை. டொனால்ட் ட்ரம்ப், ‘‘ரஷ்யாவையும் புடினையும் ஒரு எதிரியாகப் பார்க்காமல் இரு நாட்டு உறவுகளை சீர்படுத்த வேண்டும் ; ரஷ்யாவை ஒரு போட்டியாகப் பார்க்கலாமே தவிர எதிரியாக அல்ல’’ என்று கூறுவதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிபர் புடின் செய்த உதவிக்கு கைமாறாக இப்படிப் பேசுகிறார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, ஈரான் மீதும் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. அணு ஆயுதங்களைக் கைவிடவும் சர்வதேச ஆய்வுகளுக்கு உட்பட வும் 2015-ல் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர் ஈரானில் இயல்பு நிலை திரும்பி வளர்ச்சிப் பாதையை நோக்கிய பயணம் தொடங்கியது. ஆனால் தற்போது ஒப்பந்தத்தி லிருந்து வெளியேறியது மட்டு மல்லாமல் ஈரான் மீது தன்னிச் சையாகப் பொருளாதாரத் தடைகளை விதித்துவிட்டு இதனைப் பிற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் அமெரிக்காவுடன் வாணிபத் தொடர்புகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார் ட்ரம்ப். இதனால் ஈரானில் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளும் உள்நாட்டுக் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையையும் இது பாதிக்கும். நேட்டோ ஒப்பந்த நேச நாடான துருக்கியின் அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீது கூடுதல் வரி விதித்ததன் மூலம் துருக்கியின் பொருளாதாராம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் ரஷ்ய உளவுத்துறை நச்சுவாயு மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, ரஷ்யாவின் மீது திடீரென்று பொருளாதாரத் தடைகளை விதித்ததனால் அந்நாட்டு நாணய மான ரூபிள் வீழ்ச்சியை சந்தித் துள்ளது. ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா போன்ற நேச நாடுகளின் ஏற்றுமதிக்குக்கூட கூடுதல் வரி விதித்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
இவையெல்லாவற்றையும் விட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்ததன் மூலம் சீனாவும் பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க, இது இருநாட்டுப் பொருளா தாரத்தையுமே பாதித்ததோடல்லா மல் அமெரிக்காவில் பல வேலை வாய்ப்புக்களையும் பறித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட நாடுகளை மட்டு மல்லாமல் உலகப் பொருளா தாரத்தையும் பாதிப்பதுதான் கவலைதரக்கூடிய விஷயம். மேலும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான். வெண்கலக் கடையில் யானை புகுந்தால் இப்படித்தான் இருக்குமோ?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT