Published : 03 Aug 2018 08:31 AM
Last Updated : 03 Aug 2018 08:31 AM
குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த காசெர் பிர்கார், நாட்டை விட்டு அகதியாக வந்தவர். பின்னர் கடின உழைப்பு, திறமை மூலம் கணிதத்தில் முன்னேறினார். தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்று கிறார். ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 1-ம் தேதி நடந்த விழாவில், பிர்காருக்கும் பீல்ட்ஸ் விருது வழங்கப்பட்டது. 14 காரட் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால், சில நிமிடங்களில் விருது வைத்திருந்த அவரது சூட்கேஸ் திருடு போனது. ரியோ டி ஜெனிரோ நகரில் திருட்டு சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. இந்நிலை யில், பீல்ட்ஸ் விருது திருடப் பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நோபல் பரிசுக்கு நிகரானது
நோபல் பரிசுக்கு நிகரானதாகக் கருதப்படும், கணிதத்துக்கான சர்வதேச விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உட்பட 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் கணிதவியல் அறிஞர் ஜான் சார்லஸ் பீல்ட்ஸ், கடந்த 1924-ம் ஆண்டு கணிதத்துக் கான காங்கிரஸ் அமைப்பை உரு வாக்கினார். அவரது எண்ணத்தில் உருவானதுதான் ‘சர்வதேச கணித சங்கம்’ (ஐஎம்யூ). இந்த அமைப்பு கணிதத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் 2 அல்லது 4 பேருக்கு, ‘பீல்ட்ஸ்’ என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கணிதத்துக்கான நோபல் பரிசு என்று புகழப்படும் இந்த விருது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2018-ம் ஆண்டுக் கான பீல்ட்ஸ் விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக் ஷய் வெங்கடேஷ், ஈரான் நாட்டின் குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த காசெர் பிர்கார், ஜெர்மனியின் பீட்டர் சோல்ஸ், இத்தாலியின் அலிசியோ பிகாலி ஆகிய 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விருது வழங்கும் விழா பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 1-ம் தேதி நடந்தது. அதில் 4 பேருக்கும் பீல்ட்ஸ் விருதுக்கான பதக்கமும் பரிசுத் தொகையாக 15 ஆயிரம் கனடா டாலரும் வழங்கப்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த வெங்கடேஷ் குழந்தையாய் இருக் கும்போதே அவரது பெற்றோர் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். அங்கு கணிதத்தில் திறமையுடன் வளர்ந்த வெங்கடேஷ், மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத் தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 20 வயதில் கணிதத்தில் பிஎச்.டி பட்டமும் பெற்றுவிட்டார். தற்போது 36 வய தாகும் வெங்கடேஷ் அமெரிக்கா வின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராக இருக்கிறார்.
திருடு போன தங்கப் பதக்கம்
குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த காசெர் பிர்கார், நாட்டை விட்டு அகதியாக வந்தவர். பின்னர் கடின உழைப்பு, திறமை மூலம் கணிதத்தில் முன்னேறினார். தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 1-ம் தேதி நடந்த விழாவில், பிர்காருக்கும் பீல்ட்ஸ் விருது வழங்கப்பட்டது. 14 காரட் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால், சில நிமிடங்களில் விருது வைத்திருந்த அவரது சூட்கேஸ் திருடு போனது. ரியோ டி ஜெனிரோ நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பீல்ட்ஸ் விருது திருடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT