Published : 10 Aug 2018 08:51 AM
Last Updated : 10 Aug 2018 08:51 AM
அமெரிக்காவின் நியூ யார்க்கை தலைமையக மாகக் கொண்டு இயங்கும் ‘நீதி கேட்கும் சீக்கியர்கள்’ (Sikhs for Justice) என்ற அமைப்பு சீக்கியர் களின் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. இதற்காக பொது வாக்கெடுப்பு (ரெஃபராண் டம் 2020) நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 12-ம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரில் மாபெரும் சர்வ தேச பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் காஷ்மீர் தீவிரவாத தலைவர்களும் இணைகிறார்கள். இது வெளிப் படையாகத் தெரிந்த ஒன்று. ஆனால் இதில் பாகிஸ்தானின் பங்கும் இருப்பது சமீபத்தில் தெரிய வந் திருக்கிறது.
பொது வாக்கெடுப்பு என்பது நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நிலைப்பாடு. இதைத் தெளிவாக்கிக்கொள்ள காலிஸ் தான் குறித்த பின்னணியை நினை வுக்குக் கொண்டு வருவது அவசியம்.
சீக்கியர்களில் ஒரு பகுதியினர் தங்களுக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்றும், அது காலிஸ் தான் என்று அழைக்கப்படும் என் றும் நெடுங்காலமாகவே போராடி வருகிறார்கள். காலிஸ்தான் என்பது எந்தப் பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் வரையறுக்கிறார்கள். பாகிஸ்தானி லுள்ள பஞ்சாப் மற்றும் நம் நாட்டின் பஞ்சாப், ஹரியானா, இமாச் சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சீக்கியர் அதிகம் வசிக்கும் சில பகுதிகளைச் சேர்ந்து காலிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை.
அதன் தொடர்ச்சியாகத்தான் ‘சீக்கியர்களின் தேசமாக காலிஸ் தான் உருவாவதில் தவறில்லை’ என்கிறது ரெஃபராண்டம் 2020. அனைத்து சீக்கியர்களின் முடிவுக்கு இது விடப்பட வேண்டும் என்று உலக அரங்குகளில் இது வலியுறுத்துகிறது.
இதன் பின்னணியில் பாகிஸ் தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. குள்ளநரித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சமீபத்தில் தெரிய வந்திருக் கிறது.
தனது நாட்டில் ஒரு பகுதியை இழக்க நேரிடும் என்றாலும் பாகிஸ்தான் எதற்கு காலிஸ்தானை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும்? வேறென்ன, தனக்கு ஒரு கண் போனாலும் எதிராளிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற எண்ணம்தான். இந்தியாவின் ஒரு பகுதி துண்டாடப்படுவதில், நம்மிடருந்து துண்டாகிப்போன பாகிஸ்தானுக்கு ஓர் உற்சாகம்.
நமது பஞ்சாபில் தீவிரவாதத் துக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் அங்கு இயங்கிய தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குச் சென்றதும், அவர்களை பாகிஸ் தானிய உளவு அமைப்பு அர வணைத்தது என்றும் இந்தியா வுக்கு எதிரான அவர்கள் போக்கை கொம்பு சீவிவிட்டதும் உண்மை என்கிறார்கள் நம் உளவுத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள்.
பாகிஸ்தானின் மற்றொரு சதியும் வெளியாகி இருக்கிறது. அந்த நாட்டு ராணுவத்தின் லெப்டி னன்ட் கர்னலான ஷாஹித் முகம்மது மால்ஹி என்பவர்தான் ரெஃபராண்டம் 2020 இயக்கத் தின் மூளையாக இருந்து செயல் படுகிறாராம். இதை நிரூபிக்கும் ஆவணங்கள் மால்ஹியின் கணினியிலிருந்து எடுக்கப்பட்டுள் ளன. ரெஃபராண்டம் 2020-க்கு ‘ஆபரேஷன் எக்ஸ்பிரஸ்’ என்று சங்கேதப் பெயரிட்டிருக்கிறது ஐ.எஸ்.ஐ.
மால்ஹி தனது மேலதிகாரிக்கு அனுப்பிய ஓர் ஆவணத்தில் ரெஃபராண்டம் 2020, ஜூன் 6, 2020 அன்று தன்னுடைய முக்கியக் குறிக்கோளைத் தொடங்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜூன் 6-ம் தேதிதான், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆணைப்படி, இந்திய ராணுவத்தினர் பொற் கோயிலில் புகுந்து அங்கிருந்த சீக்கியப் பிரிவினைவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மரபுகளின்படி தங்கள் உரிமைகளைக் கேட்பதாகவும், மற்றபடி இதில் எந்த சதித்திட்டமும் இல்லை என்றும் ‘நீதி கேட்கும் சீக்கியர்கள்’அமைப்பு கூறி வந்தது. ஆனால் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு இதில் உள்ள தொடர்பு அதைப் பொய் என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT