Last Updated : 29 Aug, 2018 02:52 PM

 

Published : 29 Aug 2018 02:52 PM
Last Updated : 29 Aug 2018 02:52 PM

பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்: ஆஸ்திரேலிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடல் அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா அருகிலுள்ள நியூ கலிடோனியா, ஃபிஜி, வனாடு ஆகிய மூன்று தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிய அளவே மக்கள்தொகை கொண்ட லயோலிட்டி தீவுகளுக்கு அருகே சுமார் 231 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் 27 கிலோமீட்டர் (17 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஆஸ்திரேலியா அருகில் நியூ கலிடோனியாவின் கடற் கடற்கரைக்கு அருகே 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 0..3 லிருந்து 1 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் உயர்ந்துள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நியூ கலிடோனியாவின் கடலோரப் பகுதிகளில் இரண்டு இடங்களில் 16-17 சென்டிமீட்டர் (6.3-6.7 அங்குலம்) உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்துள்ளதாக பதிவாகின. இந்த அளவுகளில் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை

உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வந்த அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து. கடற்கரைக்கு அருகில் இருப்பவர்களுக்கு ''எச்சரிக்கையாக இருங்கள்'' என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நியூ கலிடோனியா முழுவதும் இந்த நிலநடுக்க அதிர்ச்சி கடுமையாக உணரப்பட்டுள்ளதாகவும், தீவிலிருந்து 103 கிலோ மீட்டருக்கு அப்பால் இந்த அதிர்ச்சி குறைந்துள்ளது என்றும் ஆஸ்திரேலிய ஜியோசயின்ஸ் தெரிக்கிறது.

நியூசிலாந்துக்கு பாதிப்பில்லை

மார்ஷல் தீவுகள், சமோவா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பிற பசிபிக் நாடுகளுக்கு சிறிய அலைகள் குறித்து முன்னறிவிப்பு செய்யப்பட்டன, இருப்பினும் நியூசிலாந்து அதிக தொலைவில் இருப்பதால் இதன் பாதிப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

"பூகம்பத்தில் இருந்து நியூசிலாந்துக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்," என்று சிவில் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை முகாமைத்துவ அமைச்சகம் இன்று காலை தெரிவித்தது.

ஒரு பிரஞ்சு யூனியன் பிரதேசமான நியூ கலிடோனியா, பிஜி மற்றும் வனாடு ஆகிய பசிபிக் கடல் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலைகள் வெடிப்பதால் இவை தனிமண்டலமாக இனங்கானப்பட்டு 'ரிங்க் ஆப் ஃபயர்' என்று அழைத்துவருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x