Last Updated : 20 Aug, 2018 10:36 AM

 

Published : 20 Aug 2018 10:36 AM
Last Updated : 20 Aug 2018 10:36 AM

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில்  300க்கும் மேற்பட்டவர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட  நிலநடுக்கத்துக்குப் பலியான நிலையில் மீண்டும் அப்பகுதியில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தரப்பில், "இந்தோனேசியாவில் லாம்போக் தீவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியது.  இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஆங்காங்கே சாலைகள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில்  ஆகஸ்ட் 5 ஆம் தேதி  இரவு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகோலில் 6.8, 7 ஆகப் பதிவாகின. 132 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நில நடுக்கத்துக்கு 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.அங்கு 80 சதவீத வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்தன. இந்த நிலையில் மீண்டும் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x