Last Updated : 11 Jun, 2018 01:06 PM

 

Published : 11 Jun 2018 01:06 PM
Last Updated : 11 Jun 2018 01:06 PM

கனடா  பிரதமர் எங்கள் முதுகில் குத்திவிட்டார்: அமெரிக்கா குற்றச்சாட்டு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வர்த்தக வரி விதிக்கும் விவகாரத்தில் எங்கள்  முதுகில் குத்திவிட்டார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர் குற்றம் சாட்டியுள்ளார்.

கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளடக்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் நடைபெற்றது.

 இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வர்த்தக வரிவிதிப்பு விகாரத்தில் நேர்மையற்று நடந்து கொள்கிறார் என்று கூறி ஜி 7  மா நாட்டின் முடிவில் வழக்கப்பட்டகூட்டு அறிக்கைக்கான ஆதரவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப பெற்றார். அமெரிக்கா மீது கூடுதல் வரியை பிற நாடுகள் விதிப்பதாக  ட்ரம்ப் கூறினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர்  பக்கத்தில் ” இருதரப்புப்பு ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்றால் இது நியாமான வர்த்தகம் அல்ல முட்டாள்தனமான வர்த்தகம். எங்களது நண்பர்கள் மற்றும் எதிரிகளை எங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம்.  நாங்கள் அமெரிக்கா தொழிலாளர்களையே முன் வைப்போம்”  என்று பதிவிட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து  ட்ரம்ப்பின் பொருளாதார ஆலோசகர் கூறும்போது, ”வர்த்தக வரிவிதிப்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் எங்களது முதிகில் குத்திவிட்டார்.  உள் நாட்டு லாபத்திற்காக முதிர்ச்சியற்ற அரசியலை செய்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, ” இது வருந்தமளிப்பதாக உள்ளது.கனடா மக்கள் அமைதியானவர்கள்தான் ஆனால்  எங்களை எப்படி வேண்டுமானாலும் நடத்த முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

கனடா - அமெரிக்கா இடையே வர்த்தகத்தில் மோதல்  ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x