Published : 27 Aug 2014 10:00 AM
Last Updated : 27 Aug 2014 10:00 AM

லிபிய கடற்கரையில் ஒதுங்கிய சடலங்கள்: சட்டவிரோதமாக சென்ற படகு மூழ்கி விபத்து

லிபியா நாட்டு கடற்கரையில் 70 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவர்கள் சட்டவிரோதமாக வேறு நாட்டுக்கு செல்ல முயன்றவர்கள் என்று தெரியவந்துள்ளது. இது தவிர கடலில் மூழ்கிய படகில் இருந்து சுமார் 100 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக லிபிய கடல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

லிபிய கடல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெரிய படகு மூழ்கியது. இதையடுத்து நாங்கள் அங்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். அப்போது 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவர்களில் சிலர் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா, எரித்திரியா ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வேறு நாட்டுக்கு செல்ல முயன்றவர்கள் என்பது தெரியவந்தது. மூழ்கிய படகில் இருந்து 100 சடலங்கள் மீட்கப்பட்டன. இப்போது ஏராளமான சடலங்கள் கரை ஒதுங்க தொடங்கியுள்ளன. சுமார் 70 சடலங்களை செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிரியா, இராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலால் அந்நாட்டைச் சேர்ந்த பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று குடியேறும் நோக்கத்துடன் கடலை கடக்க முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை காரணமாக மக்கள் வேறுநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முடிவெடுக்கின்றனர். எனினும் மோசமான படகுகள் மற்றும் வானிலை காரணமாக பலரும் கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x