Published : 24 Jul 2018 10:15 AM
Last Updated : 24 Jul 2018 10:15 AM
சீனாவில் மரபான ஒரு பழக்கம் பாம்பு ஒயின் தயாரிப்பதாகும். சீனாவில் பெண்மணி ஒருவர் பாம்பு ஒயின் தயாரிக்க விஷப்பாம்பு ஒன்றை ஆன்லைனில் வாங்கியது அவரது விதியையே முடித்துள்ளது.
ஷான்சி மாகாணத்தில் 21 வயது பெண் ஒருவர் ஒருவகையான கட்டுவிரியன் பாம்பை ஆன் லைனில் வாங்கியுள்ளார், ஆனால் கட்டுவிரியன் அவரைக் கடித்ததில் 8 நாட்களுக்குப் பிறகு சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
இ-காமர்ஸ் நிறுவனமான ஸுவான்சுவானில் ஆர்டர் செய்து இந்தக் கொடிய விஷமுடைய கட்டுவிரியன் பாம்பை அவர் வாங்கியுள்ளார்.
குவாங்டாங் பகுதியில் இவ்வகைப் பாம்புகள் சீனாவில் அதிகம் அங்கிருந்து ஒருவர் மூலம் ஆன்லைனில் இந்தப் பெண்மணி வாங்கியுள்ளார்.
இந்தப் பாம்பு உள்ளூர் கூரியர் நிறுவனம் ஒன்றின் மூலம் இவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கூரியர் நிறுவனத்துக்கு பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
பெண்ணைக் கடித்துவிட்டு இந்தக் கொடிய விஷமுடையக் கட்டுவிரியன் காணாமல் போய்விட்டது, பிறகு வனவிலங்கு அதிகாரிகள் வந்து தேடும் போது இந்தப் பெண்ணின் வீட்டருகில் இருந்துள்ளது.
வனவிலங்குகள் ஆன்லைன் மூலம் விற்க சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாம்பின் மூலம் மருத்துவ ஒயின் தயாரிக்க சியோ ஃபாங் என்ற இந்தப் பெண் முயற்சி செய்திருக்கிறார். கட்டுவிரியன் பாம்பை வாங்கி அதனை முழுதும் ஆல்கஹாலுக்குள் செலுத்த வேண்டும். இதன் மூலம் பெறப்படும் பானம் போதை அதிகமாக இருக்கும் என்பதோடு மருத்துவத்துக்குப் பயன்படும் என்று கூறப்படுகிறது, ஆனால் இந்தப் பெண் எதற்காக வாங்கினார் என்ற உண்மைக் காரணம் தெரியவில்லை. பாம்பு ஒயின் தயாரிக்கும் முயற்சியில் கடிபட்டு காயமடைந்துள்ளார். காயத்தின் தீவிரம் புரியாமல் வெறுமனே கட்டுமட்டும் போட்டுள்ளார்.
பிறகு அன்றைய தினம் மூச்சு விட சிரமமாகவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், அங்கு பாம்பு கடி உறுதி செய்யப்பட்டுள்ளது. பிறகு அவர் கோமாவில் விழுந்துள்ளார். வேறு மருத்துவமனைக்கு மாற்றிய போது அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
கட்டுவிரியன் விற்பனை குறிப்பிட்ட நிபுணர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இவ்விவகாரம் சர்ச்சையாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT