Published : 11 Jul 2018 06:52 PM
Last Updated : 11 Jul 2018 06:52 PM
தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களை மீட்பதில் நாயகப் பங்காற்றிய ஆஸ்திரேலிய மருத்துவருக்கு அதன் பிறகு சொந்த வாழ்க்கையில் ஓர் தீரா சோகம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு தாய்லாந்தில் உள்ள குகையில் தாய்லாந்து சிறுவர் கால்பந்து அணி மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது அவர்களைக் காப்பாற்ற பெரும்பங்கு வகித்தவர் ஆஸ்திரேலிய மருத்துவர், மயக்க மருந்து நிபுணர் ரிச்சர்ட் ஹாரிஸ், இன்று தன் தந்தை இறந்து விட்ட துக்கத்தைத் தாங்க நேரிட்டுள்ளது
அவர் தந்தை ஜிம் மரணமடைந்தார், நேற்று குகையிலிருந்து 12 சிறுவர்களை மீட்ட பிறகு சிறிது நேரத்தில் ஹாரிஸின் தந்தை காலமானார். அவர் இறந்தது எப்படி என்ற தகவல் இல்லை.
மயக்க மருந்து நிபுணரான ஹாரிஸ், குகையில் தண்ணீரில் குதிப்பதில் நிபுணர். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையில் இவரது பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சிறுவர்கள் காப்பாற்றப்படக் கூடிய மருத்துவ நிலையில் இருக்கின்றனரா என்பதை இவர்தான் முதலில் சோதனை செய்தார். வெள்ள நீர் நிரம்பிய குகைக்குள் சுமார் 4 கிமீ நீந்தி 12 சிறுவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்துள்ளார் ஹாரிஸ்.
இந்த சாதனை மருத்துவர் தந்தையை இழந்ததற்கு அவருக்கு ஆறுதல்கள் பலதரப்பிலிருந்தும் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT