Published : 14 Jul 2018 12:17 PM
Last Updated : 14 Jul 2018 12:17 PM
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய இரு தீவிரவாதத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக முக்கிய கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வரும் வேளையில் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில், "பன்னு மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கைபர் பக்துன்வாகா மாகாண முன்னாள் முதல்வரும், ஜமியத் உலமா இ இஸ்லாம் பஸல் தலைவருமான அக்ரம் கான் துரானி பங்கேற்றார். இவர் கூட்டணி கட்சியான முத்தாஹிதா மஜ்லிஸ் இ அமல் (எம்எம்ஏ) சார்பில் போட்டியிடுகிறார்.
பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு 40 மீட்டர் தொலைவில் துரானி வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதில் 5 பேர் பலியாகினர். மேலும் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலுசிஸ்தான் அவாமி கட்சித் தலைவர் நவாப்ஸதா சிராஜ் ரெய்சானி என்பவர் உட்பட 123 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த 2014 ஆ ஆண்டு பெஷாவரிலுள்ள ராணுவ பள்ளியில் நடத்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது. பெஷவார் தாக்குதலில் 150 பேர் பலியாகினர். பலியானாவர்களில் பெரும்பாலோனோர் மாணவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT