Published : 18 Mar 2025 01:21 AM
Last Updated : 18 Mar 2025 01:21 AM

பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன்: அமெரிக்​காவைச் சேர்ந்த பிட்​கா​யின் முதலீட்​டாளரை ஏமாற்றி அவர் கணக்​கில் இருந்த 4,100 பிட்​கா​யின்​களை சிங்​கப்​பூரை சேர்ந்​த மெலோனி லாம் (20) மற்​றும் அவரது நண்​ப​ரான ஜீன்​டீல் செரானோ ஆகியோரது சொந்த கணக்​கிற்கு மாற்​றி​யுள்​ளனர். அதன் இன்​றைய மதிப்பு 450 மில்​லியன் டால​ராகும். இந்த பணத்​தில் அவர்​கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்​துள்​ளனர்.

மெலோனி லாம், கைது செய்​யப்​படு​வதற்கு அதாவது 2024-ம் ஆண்டு செப்​டம்​பருக்கு முன்​பாக மியாமி, லாஸ்​ஏஞ்​சல்ஸ் இரவு கேளிக்கை விடு​தி​களில் ஒரு நாளைக்கு 5 லட்​சம் டாலர் வரை​யில் செலவு செய்​துள்​ளார். குறிப்​பாக, 48 ஷாம்​பெய்ன் பாட்​டில்​களுக்​கான 72,000 டாலரும், கிரே கூஸ் வோட்கா 55 பாட்​டில் வாங்​கு​வதற்கு 38,500 டாலரும் செல​விட்​டுள்​ளார். மாடல் அழகி​களுக்கு 20,000 (ரூ.18 லட்​சம்) டாலர் மதிப்​புடைய ஹெர்ம்ஸ் பர்​கின் பைகளை வாங்கி பரிசளித்​துள்​ளார். இது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.5 கோடி​யாகும்.

லம்​போர்​கினி, போர்​ஷ், பெராரி உள்​ளிட்ட 30 சொகுசு கார்​களை வாங்கி குவித்​துள்​ளார். இதில், பகானி ஹுய்ரா காரின் மதிப்பு மட்​டும் 38 மில்​லியன் டாலர் (ரூ.33 கோடி). லாம் மற்​றும் செரானோ ஆகியோரின் சொகுசு வாழ்க்​கையை கண்​காணித்து வந்த அமெரிக்க புலா​னாய்வு அதி​காரி​கள் அவர்​களை கடந்த ஆண்டு கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். வாஷிங்​டன் நீதி​மன்​றத்​தில் லாம் மீது 230 மில்​லியன் டாலர் மதிப்​பிலான பிட்​கா​யினை திருடிய​தாக குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கின் விசா​ரணை அக்​டோபர் 6-ம் தேதி நடை​பெற உள்​ளது. குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​படும் பட்​சத்​தில் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்​டனை கிடைக்க வாய்ப்​புள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x