Published : 19 Nov 2024 05:03 AM
Last Updated : 19 Nov 2024 05:03 AM

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கையில் கடந்த 14-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அலூ குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமர, புதிய அமைச்சர்களை அதிபர் திசாநாயக்க நேற்று அறிவித்தார். கடந்த செப்டம்பரில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட ஹரிணி அமரசூர்ய (54) நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி ஆகிய துறைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதிபர் அனுர குமார திசாநாயக்க, நிதி, பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளை தன்வசம் வைத்துள்ளார். அமைச்சர்களாக விஜித ஹேரத் (வெளியுறவுர், கலாநிதி சந்தன அபேரத்ன (உள்ளாட்சி), ஹர்சன நானயக்கார (நீதி), லால் காந்த (வேளாண்), அனுா கருணாதிலக (வீட்டு வசதி) ஆகியோரும் பதவியேற்றனர்.

மைச்சரவையில் 2 தமிழர்கள்: அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மாத்தறையை சேர்ந்த சரோஜா சாவித்திரி போல்ராஜ் (மகளிர் நலம்), ராமலிங்கம் சந்திரசேகர் (கடல் வளம்) ஆகிய 2 பேரும் தமிழர்கள். அமைச்சரவையில் அதிபர், பிரதமர் உட்பட 22 பேர் உள்ளனர். பிரதமர் ஹரிணி, கொழும்பு பிஷப் கல்லூரியில் அடிப்படை கல்வியை முடித்த பிறகு, டெல்லி இந்து கல்லூரியில் சமூக வியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவின் மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், பிரிட்ட னின் எடின்பர்க் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்தின் குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர், இலங்கை திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பேராசிரி யையாக பணியாற்றியவர், அரசியல் ஆர்வத்தால் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x