Published : 12 Nov 2024 08:05 PM
Last Updated : 12 Nov 2024 08:05 PM

சீனாவில் கூட்டத்துக்குள் தாறுமாறாக காரை ஓட்டியதில் 35 பேர் பலி, 43 பேர் காயம்

பெய்ஜிங்: சீனாவின் ஜுஹாய் நகரில் 62 வயது முதியவர் ஒருவர், மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழந்தனர்; 43 பேர் காயமடைந்தனர்.

காரை ஓட்டிச் சென்ற முதியவர் ஃபான் என்று அடையாளம் காணப்பட்டது. விவாகரத்தான அவர் பெய்ஜிங் நகரில் இருந்து 2,200 கி.மீ தொலைவில் உள்ள ஜுஹாய் நகரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மையத்தில் திங்கள்கிழமை இரவு 7.48 மணிக்கு பொதுமக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது காரை ஓட்டிச் சென்று மோதியுள்ளார் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து காரை ஓட்டிச் சென்ற முதியவர் கைது செய்யப்பட்டார். எனினும், இது விபத்தா அல்லது தாக்குதலா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் கார் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வலியுறுத்தினார். மேலும், குற்றவாளி சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து சீன அரசு ஊடகங்களில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பான போதிலும் எக்ஸ் பக்கத்தில் வெளியான வீடியோக்களில் சாலைகளில் இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடப்பதையும், மக்கள் உதவிக்காக கதறும் கோரமான காட்சிகள் தெரிகின்றன. ஜுஹாய் நதரில் சீனாவின் பெருமைமிக்க வான் சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x