Published : 28 Oct 2024 03:27 AM
Last Updated : 28 Oct 2024 03:27 AM

தீவிர இடதுசாரிகளால் கட்டுப்படுத்தப்படும் விக்கிப்பீடியாவுக்கு நன்கொடை தர வேண்டாம்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரும், எக்ஸ் வலைதள அதிபருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: உலகம் முழுவதும் விக்கிபீடியா தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தீவிர இடதுசாரி ஆர்வலர்களால் கட்டுப்படுத்தக்கூடிய தளமாக விக்கிபீடியா உள்ளது. தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக் கும் இடையே நடந்து வரும் மோத லில் பிரச்சினையை உருவாக்க விக்கிப்பீடியாவைச் சேர்ந்த 40 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் மூலம் இஸ்ரேல்தான் தவறு செய் கிறது நம்ப வைக்க முயற்சி நடக் கிறது. எனவே, பொதுமக்கள் விக்கிப்பீடியாவுக்கு நன்கொடை அளிப்பதை நிறுத்தவேண்டும்.

இதுதொடர்பான அறிக்கை, பைரேட் வயர்ஸ் செய்தி நிறுவனம் மூலம் வெளியாகியுள்ளதை நாம் அறியலாம். எனவே, பொதுமக்கள் அமெரிக்காவைச் சேர்ந்த விக்கிப் பீடியாவுக்கு நன்கொடை அளிக்கக் கூடாது. அது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இந்தியாவில் விக்கிப்பீடியாவுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களை அதன் ஆசிரியர்கள் திருத்துவதாக புகார் எழுந்தது. இந்தியாவைச் சேர்ந்த ஏஎன்ஐ செய்தி நிறுவனம், மத்திய அரசின் செய்தி நிறுவனம் என்றும், எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடாமல், பாஜக தலைவர்களின் செய்திகளை மட்டும் ஏஎன்ஐ வெளியிடுகிறது என்றும் விக்கிப்பீடியாவில் குறிப் பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏஎன்ஐ நிறுவனம் சார்பில் விக்கிப் பீடியாவுக்கு எதிராக வழக்கு தொட ரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x