Published : 18 Oct 2024 04:27 AM
Last Updated : 18 Oct 2024 04:27 AM

இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா பிரதமர் ஒப்புதல்

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டி வருகிறார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக மவுனமாக இருந்த அவர் தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார். நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதர்சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்புஇருப்பதாக பிரதமர் ஜஸ்டின் அண்மையில் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சஞ்சய் குமார்வர்மா உட்பட 6 இந்திய தூதரகஅதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பணியாற்றிய 6 கனடா தூதரக அதிகாரிகளை மத்தியஅரசு வெளியேற்றியது.

கனடா அரசியலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் தொடர்பான விவகாரங்களை அந்த நாட்டின் சிறப்பு குழு விசாரிக்கிறது. இந்த குழு, நிஜ்ஜார் கொலை வழக்குதொடர்பாக கடந்த 16-ம் தேதி விசாரணை நடத்தியது. அப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் சிறப்புகுழுவின் முன்பு நேரில் ஆஜராகிவிளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “ஹர்தீப் சிங்நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை.கனடா உளவுத் துறை தகவலின்அடிப்படையில் இந்த கொலைவழக்கு தொடர்பான விசாரணைக்குஇந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். ஐந்து கண்கள் என்ற அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, கனடா ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக இந்த அமைப்பின் உளவாளிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர்” என்றார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா மற்றும் இந்திய தூதர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கனடாஅரசு ஆதாரங்களை வழங்கவில்லை. கனடா பிரதமர் ஜஸ்டினின் பொறுப்பற்ற செயலால் இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல்ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கனடா போலீஸ் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்புகூறும்போது, “இந்தியாவை சேர்ந்தநிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் உதவியுடன் இந்திய அரசு கனடாவில் பல்வேறுசமூகவிரோத செயல்களில் ஈடுபடுகிறது” என்று குற்றம் சாட்டினர். இதே குற்றச்சாட்டை கனடா பிரதமர்ஜஸ்டினும் முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறியதாவது: லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலை சேர்ந்த பலர் கனடாவில் பதுங்கி உள்ளனர். குறிப்பாக குர்ஜித் சிங், குர்ஜிந்தர் சிங், அர்தீப் சிங்கில், லக்பீர் சிங் லண்டா, குர்பிரீத் சிங் ஆகியோர் கனடாவில் உள்ளனர்.அவர்களை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கனடாஅரசிடம் கோரி உள்ளோம். ஆனால்கனடா அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பான உறுதியான ஆதாரங்களை கனடா அரசு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் கனடா வழங்கவில்லை.

இந்தியா மீதும் இந்திய தூதர்கள் மீதும் கனடா அரசு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகஆதாரங்கள் இல்லை என்பதை கனடா பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். இதற்குமேல் விளக்கம் அளிக்க தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியாரே வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது “எங்கள் கட்சிக்கு வெளிநாட்டு சக்திகளுடன் (இந்தியா) தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் குற்றம் சாட்டி உள்ளார். எங்கள் கட்சியை சேர்ந்த சில குறிப்பிட்ட எம்பிக்கள் வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பிரதமர் ஜஸ்டின் பொய்களை மட்டுமே பேசி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அவர் சீனாவின் உதவியை நாடுவது பகிரங்கமாக தெரிகிறது. லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து அவரை நீக்க அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். ஆட்சி நிர்வாகத்தின் தோல்விகள், கட்சியில் எழுந்துள்ள அதிருப்திகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பிரதமர் ஜஸ்டின் ஆதாரமற்ற பொய்களை கூறி வருகிறார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x