Published : 15 Oct 2024 04:33 AM
Last Updated : 15 Oct 2024 04:33 AM
டெல் அவிவ்: ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்' வான் பாதுகாப்பு கவசத்தை அமெ ரிக்க ராணுவம் வழங்க உள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானின் ஹிஸ் புல்லா தீவிரவாதிகள், ஏமனை சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள், சிரியா, ஜோர்டானை சேர்ந்த தீவிரவாதிகள் என பல்வேறு முனைகளில் இஸ்ரேல் ராணுவம் போரிட்டு வருகிறது.
இந்த சூழலில் ஈரான் அச்சுறுத் தலை சமாளிக்க இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்' வான் பாதுகாப்பு கவசத்தை வழங்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்து உள்ளது. இதனை இயக்க 100 அமெரிக்க வீரர்களும் இஸ்ரேல் செல்கின்றனர். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
‘தாட்' வான் பாதுகாப்பு கவசத்தில் ரேடார்,கட்டுப்பாட்டு அறை, ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கவச வாகனம் ஆகியவை இணைக்கப்பட்டி ருக்கும். எதிரிகளின் ஏவுகணை களை ரேடார் கண்காணித்து, கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் தெரி விக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தர வின்படி கவச வாகனத்தில் இருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்து எதிரிகளின் ஏவுகணைகளை நடு வானில் இடைமறித்து அழிக்கும். தாட் கவச வாகனத்தில் இருந்து ஏவப்படும் பேட்ரியாட் ஏவுகணை கள் சுமார் 200 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லி யமாக தாக்கி அழிக்கும். இவ்வாறு அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
லெபனானை சேர்ந்த ஹிஸ் புல்லா தீவிரவாதிகள் நேற்று இஸ்ரேலின் பின்யாமினா நகரில் உள்ள ராணுவ முகாம் மீது ட்ரோன் கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் ‘அயர்ன்டோம்' பாது காப்பு கவசத்தையும் மீறி நடந்த ட்ரோன் தாக்குதலில் 4 இஸ்ரே லிய வீரர்கள் உயிரிழந்தனர். 58 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT