Published : 11 Oct 2024 05:20 PM
Last Updated : 11 Oct 2024 05:20 PM

அணு ஆயுதத்துக்கு எதிரான ஜப்பானின் நிஹான் ஹிடாங்கியோ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: 2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகினை அடைவதற்கான அதன் முயற்சிக்காக வழங்கப்படுகிறது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த அணு குண்டுத் தாக்குதலில் உயிர்பிழைத்தவர்களை அடிப்படையாக கொண்ட இந்த இயக்கம், ஹிபாகுஷா என்றும் அறிப்படுகிறது. அணு ஆயுதம் இல்லாத உலகை அடைவதற்கும், அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை சாட்சிகளின் மூலம் நிரூப்பிக்கவும் பாடுபடுகிறது.

இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசினை அறிவிக்கும் போது, நார்வேஜியன் நோபல் குழு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை, அவர்களின் விலைமதிப்பில்லா அனுபவங்களின் மூலம் அமைதிக்கான நம்பிக்கை விதைப்பதற்காக கவுரவித்தது. அறிவிப்பின் போது அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு நாள், ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு தாக்குதலுக்கு தப்பி பிழைத்தவர்கள் வரலாற்றின் சாட்சியாக நம்மிடம் இல்லாமல் போவார்கள்.

ஆனால், நினைவுகூறுதல் மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவைகளின் வலுவான கலாச்சாரத்துடன் ஜப்பானின் புதிய தலைமுறை சாட்சிகளின் செய்திகளை மற்றும் அனுபவங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. அவர்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்குவிக்கிறார்கள். அந்த வழியில், மனிதகுலத்தின் அமைதியான எதிர்காலத்துக்குான முன்நிபந்தனையாக அணு ஆயுதங்களுக்கான தடையை கடைபிடிப்பதற்காக அவர்கள் உதவுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க அவரது நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. நாளை இலக்கியத்துக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அமைதிக்கான நோபல் பரிசும், அக்.14-ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன. நோபல் வெற்றியாளர்களுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x