Published : 08 Oct 2024 10:08 AM
Last Updated : 08 Oct 2024 10:08 AM

“உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை” - கமலா ஹாரிஸ் திட்டவட்டம்

வாஷிங்டன்: ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசுகையில், “ஐ.நா மற்றும் உக்ரைன் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. ஒருவேளை டொனால்ட் ட்ரம்ப் இப்போது அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் புதின் இன்னேரம் கீவ் நகரில் இருந்திருப்பார். இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்து அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்காது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை.

அமெரிக்க மக்களுக்கும் இஸ்ரேலிய மக்களுக்கும் இடையிலான ஒரு நல்ல நட்புறவு உள்ளது. இஸ்ரேல் தலைமையில் ராஜதந்திர ரீதியாக நாங்கள் செய்யும் பணி, நம் நாட்டு கொள்கைகளை தெளிவுபடுத்துவதற்கான ஒரு தொடர் முயற்சி. என்னுடைய பொருளாதார திட்டங்கள் அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும். ஆனால் ட்ரம்ப் உடைய திட்டங்கள் அதை பலவீனப்படுத்திவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டிக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.5ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x