Published : 30 Sep 2024 04:14 AM
Last Updated : 30 Sep 2024 04:14 AM
டெஹ்ரான்: ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உயிரிழப்புக்காக இஸ்ரேலை பழிவாங்க ஈரான் திட்டமிட்டுள்ளது. சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது மத்திய கிழக்கில் பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.இஸ்ரேல் ராணுவம் சில நாட்களுக்கு முன்பு சிரியாவில் நடத்தியட்ரோன் தாக்குதலில் ஈரான் ராணுவமூத்த தளபதி அப்பாஸ் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்த சூழலில் ஈரான் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நேற்றுநடைபெற்றது. மூடிய அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்துதீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து ஈரான் எம்.பி. அகமது கூறும்போது, ‘‘மத்திய கிழக்கில் இஸ்ரேல் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த நாட்டுக்கு தகுந்த பாடம் கற்பிக்க ஈரான் முடிவு செய்திருக்கிறது. இஸ்ரேல் மீதுஎன்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மூத்த அமைச்சர்கள், எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற பாதுகாப்பு கவுன்சில் இறுதிமுடிவு எடுக்கும்’’ என்று தெரிவித்தார்.
அமெரிக்க முகாம்கள் மீது.. சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னிபிரிவை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் சில கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதற்காக வடகிழக்கு, கிழக்கு சிரியா பகுதிகளில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன.
இதில் வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமைகுறிவைத்து ஈரான் ஆதரவு பெற்றசில குழுக்கள் கடந்த 17-ம் தேதி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் உயிரிழப்பை தொடர்ந்து அதே ராணுவ முகாம் மீது நேற்று ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. கிழக்கு சிரியாவின் கோனோகோ, அல் ஓமர், கராப் பகுதிகளில் அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன. இந்தமுகாம்கள் மீதும் நேற்று ட்ரோன்கள்மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னணியில் ஈரான்ராணுவம் இருப்பதாகக் கூறப்படு கிறது.
ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டின் ஹவுத்தி தீவிரவாதிகள், நேற்று இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகளை வீசினர். இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. வரும் நாட்களில் ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் அதிகரிக்கும் என்றுஇஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...