Published : 22 Sep 2024 06:34 AM
Last Updated : 22 Sep 2024 06:34 AM

நியூயார்க் நகரில் இன்று இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியவம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சிஇன்று நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் 3 நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். குவாட் அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

இதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். வரும் 23-ம் தேதி எதிர்காலத்துக்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.

இந்த பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக 22-ம் தேதி (இன்று) அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் சந்தித்துப் பேசும் பிரமாண்ட நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது.

இதற்காக நியூயார்க்கில் 2 பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 400 கலைஞர்கள் இந்த மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். 13 ஆயிரம் அமெரிக்கவாழ் இந்தியர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

மோடி அன்ட் யுஎஸ்: அமெரிக்காவின் 40 மாகாணங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர்ந்தோர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு மோடி அன்ட் யுஎஸ் (Modi & US) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சிக்கான தன்னார்வலர்களைத் திரட்டும் நிர்வாகி கணேஷ் ராமகிருஷ்ணன் கூறியதாவது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகர மாக நடத்தி முடிப்பதற்காக ஏராளமான அமைப்பைச் சேர்ந்த வர்கள் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கலை நிகழ்ச்சிகள்: உள்ளரங்க மேடையில் கிராமி விருது பெற்ற சந்திரிகா டாண்டன், ஸ்டார் வாய்ஸ் ஆஃப் இந்தியா வெற்றியாளர் ஐஸ்வர்யா மஜும் தார். பாடகர் ரெக்ஸ் டிசவுசா உள்ளிட்டோர் பங்கேற்று நிகழ்ச்சி களை நடத்த உள்ளனர்.

அதேபோல வெளியில் அமைக் கப்படும் மேடையில் 100 கலைஞர் கள் பங்கேற்று கிராமியக்கலை. கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கலாச்சார ஷோவுக்கான இயக்கு நர் சாய் சாகர் பட்நாயக் செய்து உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x