Published : 22 Aug 2024 04:57 AM
Last Updated : 22 Aug 2024 04:57 AM

மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் அனுப்பிய 11 ட்ரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா

மாஸ்கோ: மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன் ராணுவத்தினர் அனுப்பிய 11 ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதை ஏற்க உக்ரைன் மறுத்ததால், அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த 11 ட்ரோன்களை உக்ரைன் ராணுவம் அனுப்பியது. அதை ரஷ்ய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியதில் இருந்து தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்இது என்றும், அதை முறியடித்தோம் என்றும் ரஷ்ய ராணுவஅதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இரு நாடுகளுக்கு இடையிலான போர் பெரும்பாலும் ஏவுகணைதாக்குதல் மற்றும் ட்ரோன்கள்மூலம் தாக்குதல் என்ற அளவிலேயே நடைபெற்று வருகிறது.இதில் இருதரப்பிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமானதளங்கள் உட்பட முக்கிய இடங் கள் தகர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட்6-ம் தேதி ரஷ்யாவின் மேற்குப்பகுதியில் உள்ள குர்க்ஸ் பிராந்தியத்துக்குள் ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைன் அனுப்பியது. இதனால் பதற்றம் அதிகரித்தது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘‘தலைநகர் மாஸ்கோவில் 11 ட்ரோன்கள் உட்பட மொத்தம்45 உக்ரைன் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தி இருக்கிறோம். பிரையான்ஸ்க் பகுதியில் 23, பெல்கோராட் பகுதியில் 6, கலுகா பகுதியில் 3, குர்க்ஸ் பகுதியில் 2 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன’’ என்று தெரிவித்தனர்.

கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவமும் ட்ரோன்களை அனுப்பி உள்ளது. மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன்கள் நுழைந்ததால், உடனடியாக முக்கிய விமான நிலையங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில மணி நேரத்துக்குப் பிறகு விமான சேவைகள் தொடங்கப்பட்டன என்று ரஷ்ய விமான சேவைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடக்கும் நிலையில் இந்தியபிரதமர் மோடி நேற்று 2 நாள் பயணமாக போலந்து நாட்டுக்கு சென்றார். அங்கு அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x