Published : 06 Aug 2014 10:00 AM
Last Updated : 06 Aug 2014 10:00 AM

திருமணம் நடத்த இந்திய செல்வந்தர்கள் விரும்பிச் செல்லும் நாடாக மாறிவரும் ஓமன்

இந்தியாவைச் சேர்ந்த செல்வந்தர்கள் தமது குடும்பத் திருமணங்களை நடத்த விரும்பித் தேர்வு செய்யும் இடமாக மாறிவருகிறது ஓமன். இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதும், எல்லா நவீன வசதிகள் உடையதாக இருப்பதும், பண்டைய உலகின் வசீகரம் கொண்டதுமாக இருப்பதுமே இதற்கு காரணம்.

இந்திய திருமண சந்தையின் மதிப்பு 2500 கோடி டாலர்களாகும். இது ஆண்டுக்கு 25 முதல் 30 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியர்கள் தமது திருமண விழாக்களை நடத்த புதிய இடங்களை தேர்வு செய்கின்றனர்: இது புதிய மாற்றமாக ஆகிவிட்டது என டைம்ஸ் ஆப் ஓமன் பத்திரிகையில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

வரும் நவம்பரிலும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் இந்தியர்களின் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 700 முதல் 1000 விருந்தினர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இன்னும் ஏராளமானோர் திருமணம் நடத்துவதற்காக தகவல் கேட்டு விசாரித்து வருகின்றனர். ஓமனில் திருமணம் நடந்த இந்திய அரசும் ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நம்பிக்கை தரும் நடவடிக்கை என்று இந்தியாவில் பணியாற்றும் ஓமன் சுற்றுலா துறை அதிகாரி லுபைனா ஷீராஜி தெரிவித்தார்.

ஓமனில் திருமணம் நடத்துவதை பிரபலப்படுத்த அதற்கென தனியாக சுற்றுலாக்களை நடத்தியுள்ளது ஓமன். திருமணம் நடத்துவதற்கான சிறந்த இடமாக மாற நல்ல வாய்ப்பையும் வளத்தையும் தன்னகத்தே கொண்டது ஓமன். நவீன கட்டமைப்பு வசதிகளும் பண்டைய உலகின் வசீகரமும் கொண்டது. இதை அடிப்படையாக கொண்டே திருமணம் நடத்துவதற்கான சிறந்த தேர்வாக ஓமன் மாறுகிறது என்று கூறுகிறோம் என்றார் லுபைனா.

டெல்லி, மும்பை, அகமதாபாதில் நடந்த 2014 திட்டமிடல் நிகழ்ச்சியில் ஓமன் சுற்றுலா வாரியம் பங்கேற்றது. கடந்த ஓராண்டில் எடுத்த நடவடிக்கையால் திருமண விழா தொடர்பாக தகவல் கேட்டு இந்தியாவிலிருந்து ஏராளமான விசாரணைகள் வந்துள்ளன. ஓமனை சுற்றிப்பார்க்க வருவோர் 4, 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது 23.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றும் அந்த பத்திரிகை செய்தி மேலும் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x