Published : 24 Aug 2014 12:54 PM
Last Updated : 24 Aug 2014 12:54 PM

பூச்சிகளைத் தின்று 12 நாட்கள் உயிர் வாழ்ந்த முதியவர் மீட்பு

பிரேசில் நாட்டில் பூச்சிகளைத் தின்று 12 நாட்கள் உயிர் வாழ்ந்த முதியவர் மீட்கப்பட்டுள்ளார்.

பிரேசிலில் வாழ்ந்து வருபவர் கிலெனோ வியெய்ரா தா ரோச்சா (65). பொறியியலாளரான இவர் விலா த சுகுந்துரி எனும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வசிக்கும் மக்களுக்கும் இவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ட்ரான்ஸ் அமேசோனியான் ஹைவேயில் உள்ள ஓட்டலில் இருந்து அவர் வெளியே நடக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் அவர் வழி தவறி காட்டுக்குள் நுழைந்துவிட்டார். மானூஸ் நகரத்தில் இருந்து 435 கி.மீ., தொலைவில் உள்ள அந்தக் காட்டில் இருந்து வெளியேற அவருக்கு வழி தெரியவில்லை. இதனால் 12 நாட்கள் காட்டிற்குள்ளேயே இருந்தார். அந்த 12 நாட்களும் அவர் காட்டில் உள்ள பூச்சிகளைச் சாப்பிட்டு அவர் உயிர் வாழ்ந்திருக்கிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவர் மயக்கமடைந்த நிலையில் காட்டுக்குள் விழுந்து கிடந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற விவசாயி ஒருவர் இவரைப் பார்த்துவிட்டு, உடனே காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவரை போலீஸார் மீட்டனர். இவர் அமேசான் பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும், அதனால் அந்தக் காட்டைப் பற்றிச் சில விஷயங்கள் இவருக்குத் தெரிந்திருந்ததாலுமே இவரால் பிழைக்க முடிந்தது, என்கிறார்கள் காவல் துறையினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x