Published : 05 May 2018 07:05 PM
Last Updated : 05 May 2018 07:05 PM
செவ்வாய் கிரகத்துக்கு மனித ஆய்வாளர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கு முன்னதாக அந்தக் கிரகத்தின் பூகம்பங்களை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அடுத்த மைல்கல் விண்கலம் இன்சைட் என்பதை அனுப்பியுள்ளது.
இந்திய நேரம் 4.35 மணியளவில் கலிபோர்னியாவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்திலிருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டது.
993 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்தத் திட்டத்தின்படி செவ்வாய்க் கிரகத்தின் உட்பகுதிகள் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. மனித ஆய்வாளர்களை அங்கு அனுப்புவதற்கான முன் கட்ட ஆய்வாக அங்கு ஏற்படும் பூகம்பங்களை ஆய்வு செய்வதே இதன் முதற்கட்ட பணியாகும். அனந்தகோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமி எப்படி உருவானது என்பது குறித்த மானுட அறிவுச் சேகரத்துக்கான தகவல்கள் இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும்.
திட்டமிட்டபடி சென்றால் நவம்பர் 26-ம் தேதி இன்சைட் விண்கலம் செவ்வாயில் இறங்கும்.
நாஸா தலைமை விஞ்ஞானி ஜிம் கிரீன், “செவ்வாய்க் கிரகத்தில் நிலநடுக்கங்கள், பனிப்பாறை சரிவுகள், விண்கற்களின் தாக்குதல் ஆகியவை ஏற்படுவது இயல்புதான், ஆனால் பூகம்பம் ஏற்படுமா என்பது மிகவும் அடிப்படையான ஒரு கேள்வி இதனை ஆய்வு செய்தேயாக வேண்டும்” என்று கூறினார்.
இதற்காக பிரான்ஸ் விண்வெளி அமைப்பு ஒரு சிறப்பு சீஸ்மோமீட்டரைத் தயார் செய்துள்ளது. இன்சைட் விண்கலம் அங்கு சென்றவுடன் இந்த சீஸ்மோமீட்டர் அங்கு தரையில் பொருத்தப்படும். மேலும் கிரகத்தின் துணை மேற்புறத்தில் உஷ்ணத்தின் ஓட்டம் எப்படி உள்ளது என்பதையும் ஆய்வு செய்கின்றனர். இதற்காகவும் ஒரு ஜெர்மன் தயாரிப்பு உபகரணம் விண்கலத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை 3-5 அடி வரை அதன் நிலத்தைத் தோண்டி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது பிசிக்கல் ப்ராப்பர்ட்டி பேக்கேஜ் என்று அழைக்கப்படுகிறது, இது இந்த வேலையைச் செய்யும்.
கோடைக்காலங்களில் பகல் நேர வெப்பம் மார்ஸியன் ஈக்வடாரில் 20 டிகிரி செல்சியஸ் இருக்கும். இரவு நேரத்தில் அப்படியே மாறி மைனஸ் 73 டிகிரி செல்சியஸாகி விடும்.
சூரிய சக்தி மற்றும் பேட்டரி மூலம் சக்தி பெறும் இந்த ஆய்வு விண்கலம் 26 பூமி மாதங்கள் அங்கு செலவிடும். இதில் சுமார் 100 பூகம்பங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT