Published : 31 Jul 2024 10:09 AM
Last Updated : 31 Jul 2024 10:09 AM
ஈரான்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர்.
இது குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சகோதரர், தலைவர், போராளி இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர படைகளும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. ஹனியே தங்கியிருந்த இடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அவரும், அவரது மெய்க்காப்பாளரும் கொல்லப்பட்டனர் என்று ஈரானிய புரட்சிப் படைகள் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்மாயில் ஹனியே கடந்த 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் படையில் இணைந்தார். இஸ்ரேலுக்கு எதிரான முதல் புரட்சியில் அவர் பங்கேற்றார். 1993 வரை நடந்த அந்த மோதலில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 4 Comments )
யூதர்கள்,மானுட உலகின் நீண்ட நெடிய வரலாற்றில் பொய்யிற்கும் வஞ்சகத்திற்கும் அடையாளமாய் திகழ்பவர்கள்.மேலும் மனிதர்களின் உரிமைக்குரலை அதற்கான போராட்டங்களை போராளிகளை புரிந்து கொள்ளாதவர்கள்.சரியாக சொல்வதெனில் போராட தெரியாதவர்கள்.பிறரின் தயவில் வாழ்பவர்கள்.இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.இவர்கள் போராளிகளின் இறப்பை கொண்டாடுகிறார்கள்.உரிமை போராட்டத்தை ஒடுக்கிட முயல்கிறார்கள் எனில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.இதோ யூதர்கள் கொண்டாட ஒரு போராளி கொல்லப்பட்டிருக்கிறார்.உரிமைக்காக விடுதலைக்காக கொல்லப்படும் ஒவ்வொரு மனிதனும் அழிந்ததாய் கருதப்படுவதில்லை. மண்ணுக்குள் புதைக்கப்படும் விதை அழுகுவதில்லை.அதுபோல் போராளிகள் முளைக்ல தொடங்குகிறார்கள்.ஆம்!ஹனியாவின் மரணமும் அவரின் குடும்பத்தினர் மரணமும் ஒன்றை உரக்க சொல்கிறது: இனி பாலஸ்தீன் ஆக்கிரமிப்பு நிலமல்ல.அது முழுமையாய் சுதந்திரமடையும். அதை ஒடுக்க உருவாக்கப்பட்ட அனைத்து கண்கவர் வித்தைகளும் முடிச்சுகளும் அவிழும் அழியும்.பாலஸ்தீனம் புதிய எழுச்சியோடு தன் பயணத்தை விட்ட இடத்திலிருந்து தொடரும்.விடுதலையாய் உலகின் புதிய விடியலுக்குரிய அடையாளமாய் திகழும்.இன் ஷா அல்லாஹு.
3
10
Reply
திண்ணமாக!நாங்கள் அல்லாஹுவிற்குரியவர்கள்.மேலும் திண்ணமாக! அவனிடமே திரும்பி செல்வோம்.
6
6
Reply