Published : 20 Jul 2024 06:01 PM
Last Updated : 20 Jul 2024 06:01 PM

காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரிப்பு

கோப்புப் படம்

டெல் அவில்: காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜபாலியாவில் உள்ள வீட்டில் பத்திரிகையாளர் முஹம்மது அபு ஜாசர், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,919 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 89,622 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தெற்கு காசாவின் ரஃபாவில் இஸ்ரேல் படைகள் உளவுத்துறை அடிப்படையிலான செயல்பாட்டு நடவடிக்கைகளை தொடர்வதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

இந்நிலையில், ஓமன் வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், பாலஸ்தீன நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், அது முடிவுக்கு வர வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது. தென் கொரிய நகரமான இன்சியோனில் காசாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x