Published : 19 Jul 2024 08:43 AM
Last Updated : 19 Jul 2024 08:43 AM

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.3 ஆக பதிவு

சாண்டியாகோ: தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 7.3 ரிக்டராகப் பதிவானது என்று ஐரோப்பிய மத்தியதரைகடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கமானது சிலி நாட்டின் கடற்கரை நகரமாக அன்டோஃபகாஸ்டாவில் பூமிக்கு அடியில் 126 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நிலநடுக்கம் கடற்கரை நகரத்தில் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

முன்னதாக கடந்த ஜனவரியில், வடக்கு சிலியின் டாராபாக்காவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நாடு பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனும் பகுதியில் அமைந்துள்ளது. பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் என்பது பசிபிக் பெருங்கடலின் படுகையில் உள்ள ஒரு முக்கிய பகுதியாகும், அங்கு பல பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அந்தப் படுகையில் அமைந்துள்ள சிலியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாகவே இருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு சிலி நாட்டில் 8.8 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 526 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x